Skip to content

xx மாய்கையை நோக்காதே விட்டு

Lyric
1. மாய்கையை நோக்காதே விட்டு
ஞான ஆயுதங்களை
ராவும் பகலும் பிடித்து
நிர்விசாரத்தைப் பகை

2. உனதிச்சையை அடக்கு
அதுன் நெஞ்சை ஆளச்சே
கிருபையுட விளக்கு
மங்கிப் போய் அவியுமே

3. மாமிசத்துக்கேற்றதாக
செய்தால், ஏழை ஆத்துமம்
நோஞ்சலுஞ் சீர் கேடுமாக
போகும், அது நிச்சயம்

4. உண்மையுள்ளோன் ஓய்வில்லாமல்
பாவத்தை விரோதிப்பான்
எத்தின் ஆவியைக் கேளாமல்
வெற்றியாய்ப் போராடுவான்

5. அவன் கிறிஸ்துவைப் பின்பற்ற
துன்பத்தை சகிக்கிறான்
இளக்காரத்தை அகற்றி
செல்வ வாழ்வாகாதென்பான்

6. லோகத்தாருட சிரிப்பு
வெகு பைத்தியம் என்பான்
அதின் பிறகு துக்கிப்பு
வரப்போம் என்றறிவான்

7. உண்மையுள்ளோன் உலகத்தில்
உள்ளதை சிநேகியான்
அவன் பொக்கிஷம் பரத்தில்
உண்டு, அங்கே ஏகிறான்

8. இதை நாம் நினைப்போமாக
ஆ, நற்சேவகரைப் போல்
பந்தயம் பெருமட்டாக
ஏகிப் போவோம் வாருங்கள்

Credits

J.J. Winkler, 1722                                                                           

 Tr. Fabricius, 1791

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a comment