கிறிஸ்தேசுவின் கிருபையில்
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. கிறிஸ்தேசுவின் கிருபையில்
நீ நன்றாய் பலப்படு
ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்ரதைப்படு.2. வாசல் மிகவும் இடுக்கம்,
தாழ்மையாகி உட்படு;
ஜீவ வழியோ நெருக்கம்,
லோக நேசத்தை விடு.3. சேவகத்தில் பின் வாங்காமல்
ராஜ்/ஜியத்துக்குட்படு;
பேய் எதிர்த்தால், தளராமல்
நின்று ஏகிக் கொண்டிரு.4. வேண்டுதலினால் போராடி,
ஆண்டவரின் தயவு
காணுமட்டுக்கும் மன்றாடி,
கூப்பிட்டுக் கொண்டேயிரு.5. கர்த்தர் உன்னை தயவோடே
ஏற்றுக் கொண்டபிறகு,
பாவம் உன்னிலே வேரோடே
செத்ததென்றெண்ணாதிரு.6. ஜீவனுள்ள நாள் மட்டாக
மோசங்கள் இருக்குமே;
திகிலும் பயமுமாக
உன் ரட்சிப்பைக் காப்பாயே.Credits
Words: J. Winkler, 1670 – 1722
Translated by Johann Phillip Fabricius, 1711 – 1791 with the first line as தெய்வ கிருபையைத் தேட
Words modified by Gnana Bhaktamitran (2012)
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending