Skip to content

xx இயேசுவில் நான் இளைப்பாறி(Jesus I am resting)

Lyric

1. இயேசுவில் நான் இளைப்பாறி ஆத்துமத்தில் பூரிப்பேன்
அவர் அன்பின் ஆழமதை என்னென்று சொல்வேன்!
உம்மை எண்ணிப் பார்க்க பார்க்க வியப்பில் மூழ்குகின்றேனே,
உம்முடைய சக்தியினால் மாறியும் போனேன்
    
இயேசுவில் நான் இளைப்பாறி ஆத்துமத்தில் பூரிப்பேன்
அவர் அன்பின் ஆழமதை என்னென்று சொல்வேன்!

2. உம்முடைய அன்பானது கடலினும் பெரிதே,
உம்முடைய கிருபை என்னென்று சொல்லுவேன்!
ஆம் உம்மில் இளைப்பாறுவேன் உம் கிருபையால் கற்றுண்டு,
உமது வாக்குகளிலே திருப்தியாவேன்

3. உம்மை முழுவதும் நம்பி உம்மை நோக்கிப் பார்க்கிறேன்
உமது அன்போ தெளிவும் சுத்தமுமாமே
உள்ளம் ஆத்துமாவில் நானும் ஆறுதலும் படுகின்றேன்
என் குறை கவலை யாவும் மறந்தே போனேன்

4. என்றும் என்னை நேக்கிப் பாரும், வேலை, தியானம் செய்கையில்
இருள் என்னை சூழ்ந்தாலும் உம் வாக்யம் பாக்யமே
சாத்தான் என்னை சோதித்தாலும் நீரே என்னைக் காத்தருளும்
மண்ணின் கவலைகளிலும் நீரே என் துணை.

Credits

Jean S. Pigott, 1876
James Mountain 1876
Tr. Gnana Bhaktamitran

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a comment