Skip to content

அலங்கார வாசலாலே

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. அலங்கார வாசலாலே
தேவாலயம் செல்கின்றேன்;
தெய்வவீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்;
இங்கே, தெய்வ சமூகம்,
மெய்வெளிச்சம், பாக்கியம்.

2. கர்த்தரே, உம்மண்டை வந்த
என்னண்டைக்கும் வாருமேன்.
நீர் இறங்கும் போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்.
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.

3. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே,
அந்தப்படி நான் மிகுந்த
கனிகளைத் தரவே,
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.

4. விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்,
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்
மெய்வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே.

5. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்
நீர் இப்பாழ்நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல் தியானத்துடனே;
தாரும் ஜீவபானத்தை,
தீரும் பசிதாகத்தை.

Credits
Words: Benjamin Schmolck, 1672 – 1737
Translated from German to Tamil: Johann Phillip Fabricius, 1711 – 1791
Translated from German to English: Catherine Winkworth, 1863
Tune: Neander 8.7.8.7.7.7. by Joachim Neander

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: