Skip to content

ஆத்மமே உன் ஆண்டவரின் (Praise My Soul the King of Heaven)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலூயா, என்றென்றைக்கும்
நித்ய நாதரைப் போற்று.

2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி;
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.

3. தந்தை போல் மா தயை உள்ளோர்;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
பேயை வீழ்த்திக் காப்பாரே;
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4. என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே;
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே;
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுவோம்

Credits
Words: Henry Francis Lyte (1793-1847), 1834
Tune: John Goss, LAUDA ANIMA, Meter: 87.87.87

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: