Skip to content

எழுந்தார் நம் நேச கர்த்தர்

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
பல்லவி
எழுந்தார் நம் நேச கர்த்தர் மரணத்தின் கூரை ஒடித்துவிட்டு

அனுபல்லவி
பொல்லாப் பேய் நடுங்கி விழ
சீடர்கள் அனைவரும் அகமகிழ − எழுந்தார்

சரணங்கள்
1. பாவம் பேயொடு மரணம்
பாழாய்ப் போனது அதன் அரணும்
இரட்சிப்புக்கு இது தருணம்
திடமாயடைவோம் அவர் சபையை − எழுந்தார்

2. வலுசர்ப்பம் சிறையாச்சு
அது வல்லமையும் இழந்தாச்சு
மாமிசமே உன் பேச்சு!
நீ விடலாமோ இனி மூச்சு − எழுந்தார்

3. கிருபாகரர் வெற்றிபரர்
செய்தார் / தாம் ஒரு / மாபெரும் போர்
யுத்தமதில் ஜெயம் அடைந்தார்
திருச்சபை அனைவரும் களிகூர்ந்தார் − எழுந்தார்

Credits
Rev. N.Samuel
Gnana Bhaktamitran Sep 05

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: