கிறிஸ்தேசுவே நீர் எனக்காய் (Jesus, Master, Whose I am)
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. கிறிஸ்தேசுவே, நீர் எனக்காய்
இரத்தஞ்சிந்தி ஆட்கொண்டீர்,
மீட்கப்பட்ட அடிமை நான்.
நீர் என் தேவன் கர்த்தருமாம்.
என் இருதயத்தை ஆளும்.
உமக்கென்றே நான் பிழைப்பேன்.2. பரிசுத்தமாய்ப் பிழைக்க
உம்மிடமே காத்துக்கொள்ளும்
என்தன் வாழ்நாள் முழுவதும்.
உம் ப்ரகாசம் என்னில் காண
நீரே என்னில் யாவற்றையும்
ஆண்டுகொள்ளும் என் கர்த்தாவே.3. என்னை மீட்க தன்னை ஈந்த
உம்மையேதான் நான் சேவிப்பேன்.
என் நிலைமை குறைவேதான்;
ஆனாலும் உம் சித்தம் யாவும்
நிறைவேற்ற ஆசிக்கின்றேன்,
ஜெபம் கேட்டு தயை செய்யும்.4. என்னின் ஊழியம் உமக்கு
தேவையாம் என்பதால் அல்ல,
நன்றியுடனுங்கூட உம்
நாமமும் மகிமைப்பட
விரும்பும் என் வேண்டுதலை
கேட்டருளும் கி/ருபையாய்.
Credits
Words: Frances R Havergal, 1865
Translated by Gnana Bhaktamitran, 2012
Tune: Stella 8.8.8.8.8.8
Transliteration
Pending
Hymn in English
Jesus, Master, whose I am,
Purchased Thine alone to be,
By Thy blood, O spotless Lamb,
Shed so willingly for me,
Let my heart be all Thine own,
Let me live for Thee alone.Jesus, Master, I am Thine;
Keep me faithful, keep me near;
Let Thy presence in me shine
All my homeward way to cheer,
Jesus, at Thy feet I fall,
O be Thou my all in all.Jesus, Master, whom I serve,
Though so feebly and so ill,
Strengthen hand and heart and nerve
All Thy bidding to fulfill;
Open Thou mine eyes to see
All the work Thou hast for me.Lord, Thou needest not, I know,
Service such as I can bring,
Yet I long to prove and show
Full allegiance to my King.
Jesus, let me always be
In Thy service glad and free.
Devotional thoughts/historical background
“என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவன்” அப் 27:23