நம்பிக்கை இல்லாதிருந்தும் (Father of Jesus Christ, my Lord)
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. என் கர்த்தர், மீட்பர் கிறிஸ்துவின்
பிதா, உம் வார்த்தையால்
எழுந்தாரே என் இரட்சகர்;
உம்மை நான் நம்புவேன்2. நம்பிக்கை இல்லாதிருந்தும்
மனம் நொந்திருந்தும்
உயிர்ப்பிக்கும் உம் ஆவியால்
நம்பிக்கை பெருவேன்.3. அனைத்து எண்ணங்களுக்கும்
எதிர்ப்பாயிருந்தும்
கர்த்தாவின் வாக்கை நம்புவேன்;
உயிர் பெற்றெழுவேன்.4. தெய்வ வாக்கில் விசுவாசம்
கர்த்தாவையே நோக்கும்
முடியா தென்பதெதுவும்
அதனின் நகைப்பு.5. கர்த்தர் சொல்லில் நல் நம்பிக்கை
கர்த்தாவையே நோக்கும்.
முடியாதென்பதெதுவும்
அதனின் நகைப்பு.6. கல்லும் கவணையுங் கொண்டு
அரக்கன் முன் செல்வேன்.
கர்த்தரின் வாக்கை நம்புவேன்;
பாவத்தை வீழ்த்துவேன்.
Credits
Words: Charles Wesley 1707-1788
Translated by Gnana Bhaktamitran, 2011
Tune Martyrdom C.M.
Transliteration
-pending-
Hymn in English
1. FATHER of Jesus Christ, my Lord,
My Saviour, and my Head,
I trust in thee, whose powerful word
Hath raised him from the dead.2. In hope, against all human hope,
Self-desperate, I believe;
Thy quickening word shall raise me up,
Thou shalt thy Spirit give.3. The thing surpasses all my thought,
But faithful is my Lord;
Through unbelief I stagger not,
For God hath spoke the word.4. Faith, mighty faith, the promise sees,
And looks to that alone;
Laughs at impossibilities,
And cries, It shall be done!5. Faith, precious faith, the promise sees,
And looks to that alone;
Laughs at impossibilities,
And says, It shall be done!6. With my sling and stone I go
To fight the Philistine;
God hath said it shall be so,
And I shall conquer sin;
Devotional thoughts/historical background
“பாவஞ்செய்ய வழிதேடாதே; உன்னைக் கொன்று புதைக்க அது வழி தேடுகிறது, அதை ஒழித்துக்கட்ட வழி தேடு; அது நிறைவேற கர்த்தரிடம் ஓடு.” Lloyd Jones