ஆசிரியர் குறிப்பு
இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்
ஜெ.சி.ரைல் (1816-1900), Translation into Tamil by VS
ஆசிரியர் குறிப்பு:
பவுல் அப்போஸ்தலன், கிறிஸ்துவின் ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தீத்துவுக்கு நிருபத்தை எழுதி அனுப்புகையிலே இளைஞர்களை ஒரு விசேμத்த வகுப்பாராக கருதி அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றார். முதிர்வயதுள்ள ஆண்களையும், முதிர்வயதுள்ள பெண்களையும், வாலிபப் பெண்களையும் பற்றி குறிப்பிட்ட பிறகு அவர் இந்த பொருள் சுருக்கமுடைய புத்திமதியை கூறுகிறார்: “அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களா யிருக்கவும் நீ புத்தி சொல்” (தீத் 2:6). பவுல் அப்போஸ்தலனுடைய இந்த அறிவுரையையே நானும் கடைப்பிடிக்கப் போகிறேன். வாலிப வயதிலுள்ளவர்களுக்கு கரிசனையோடு நான் ஒரு சில அறிவுரைகளைக் கூறப் போகிறேன்.
இப்பொழுது நான் வயது முதிர்ந்தவனாகிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனது வாலிபநாட்களின் சில காரியங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. சந்தோஷங்களும், கவலைகளும், எதிர்பார்ப்புகளும், பயங்களும், சோதனைகளும், கஷ்டங்களும், தவறான அபிப்ராயங்களும், தவறாக செலுத்திய அன்புகளும், செய்த தவறுகளும், ஆசைகளும், எப்படி ஒரு வாலிபனை வாலிபநாட்களில் சூழ்ந்து இருந்திருக்கிறது என்பதற்கு என் வாழ்விலேயே நிறைய உதாரணங்களை வைத்திருக்கிறேன். ஆகவே என்னுடைய அனுபவத்தின் வாயிலாக நான் கூறுகிற ஏதாவது ஒரு சில காரியங்கள், சில வாலிபர்களையாவது சரியான பாதைக்குத் திருப்பி, அவர்களை பாவத்திலிருந்து காத்துக் கொண்டு, நித்தியவாழ்க்கைக்கு
ஆயத்தப்படுத்துமானால் நான் மிகவும் நன்றியுடையவனாயிருப்பேன்”
இந்த நூலில் நான் நான்கு காரியங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. இளைஞர்களுக்கு ஏன் புத்திமதிகள் சொல்ல வேண்டும் என்பதற்கு சில பொதுவான காரணங்களைக் குறிப்பிடுகிறேன்.
2. இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய சில ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கை செய்கிறேன்.
3. இளைஞர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய சில பொதுவான புத்திமதிகளைக் குறிப்பிடுகிறேன்.
4. சில ஒழுங்கு நடவடிக்கைகளை கட்டளையாக குறிப்பிடுகிறேன். அவற்றை இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென புத்தி சொல்லுகிறேன்.
இந்த நான்கு காரியங்களிலும் நான் கூறுகிற விஷயங்கள் இளைஞர்களுக்கு பிரயோஜனமாக இருந்து அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென நான் கடவுளிடம் ஜெபிக்கிறேன்.
-J. C. Ryle