xx முடிவிந்த ஜீவனுக்கு
Lyric
1. முடிவிந்த ஜீவனுக்கு
இன்றும் வரலாம் என்போம்
நம்முடைய தீபத்துக்கு
எண்ணெய் வார்க்கக் கடவோம்.
2. லோகம் பேயின் வசமாமே,
சோதோம் வேகும் அல்லவோ,
தப்பிப் போக நேரமாமே
தீவிரிக்க வேண்டாமோ
3. தப்பத்தக்கதாக ஓடு,
ஆத்துமாவே தீவிரி,
பாரத்தை இறக்கிப் போடு,
தெய்வ சொல்லை கவனி.
4. அக்ரம சோதோமை விட்டு
அதின் செய்கையை வெறு
தப்பிப் போக தீவிரித்து
நல்லொதுக்குக்குட்படு.
5. நீ பின்னானதை நாடாமல்
முன்னிருப்பதைப் பிடி.
இச்சை வைத்தழுக்காகாமல்
தெய்வ சிந்தையைத் தரி.
6. வென்றவரை மோட்சத்துக்கு
சேர்த்துயர்த்துவதற்கு
வார மணவாளனுக்கு
வாஞ்சையாய்க் காத்திரு.
7. ஓடி அவரை சந்தித்து,
“ஜீவனே, முள் காட்டைப் போல்
காணும் இப்புவியைவிட்டு
என்னைச் சேரும்,” என்று சொல்.
Credits
J.J. Winkler, 1722
Tr. Fabricius, 1791
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending