Skip to content

பிசாசின் இராஜ்ஜியங்களை

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. பிசாசின் ராஜ்ஜியங்களை
ஜெயித்துப்போட எவனை
அனுப்புவேன் என் தூதன் யார்
என்றாண்டவர் உரைக்கிறார்

பல்லவி
இதோ, கர்த்தாவின் ஊழியம்
என் பாக்கியம், என் ரம்மியம்;
என்னை அனுப்புமேன், அனுப்புமேன்,
என்னை அனுப்புமேன். அனுப்புமேன்.

2. லெளகீக ஆசை யாவையும்
விட்டென்னை நீ பின் செல்லவும்,
என் நுகத்திடி மெதுவாம்,
என் சுமை லேசுமானதாம்

3. உன் ஜீவனைப் பாராமல் நீ
உன் சிலுவையை உத்தரி;
இவ்வுலகத்தின் நிந்தையை
உன் கிரீடமாக நீ நினை. 

4. கர்த்தாவின் சுத்த வசனம்
பிசாசை வெட்டும் பட்டயம்;
பூலோகம் எங்கும் போயினி
ஓயாமல் அதை அறிவி

5. நற்சேவகன் சுதந்திரம்
மோட்சானந்தத்தின் பாக்கியம்,
மாளா கிரீடம் பெறுவான்,
என்னோடென்றைக்கும் ஆளுவான்

Credits
Pending

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: