Skip to content

நீர் உத்தம சிநேகிதர்

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]
Lyric
1. நீர் உத்தம சிநேகிதர்,
என் நெஞ்சும்மேலே சாயும்;
நீர் உத்தம சகோதரர்
நீர் என்னைப் பார்க்கும் தாயும்;
நீர் நோயில் பரிகாரியே,
உம்மாலே ஆறிப் போகுமே
என் காயமும் விடாயும்.

2. படையில் நீர் சேனாபதி,
வில் கேடகம் சீராவும்;
கரும் கடலில் நீர் வழி
காண்பிக்கும் சமுக்காவும்;
எழும்பும் கொந்தளிப்பிலே
நீர் என் நங்கூரம், இயேசுவே,
நான் ஒதுங்கும் குடாவும்.

3. நீர் ராவில் என் நட்சத்திரம்,
இருளில் என் தீவர்த்தி;
குறைவில் நீர் என் பொக்கிஷம்,
தாழ்விலே என் உயர்ச்சி;
கசப்பிலே என் மதுரம்;
நான் தொய்ந்தால் மீண்டும் என் மனம்
பலக்க, நீர் என் சக்தி.

4. நீர் ஜீவனின் விருட்சமும்,
நீர் செல்வங்கள் பொழியும்
பூங்காவனமும், என்றைக்கும்
சுகம் தரும் கனியும்;
முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே
என் ஆவிக்கு நீர், இயேசுவே,
குளிர்ந்த பூஞ்செடியும்.

5. நீர் துக்கத்தில் என் ஆறுதல்
நீர் வாழ்வில் என் களிப்பு;
நீர் வேலையில் என் அலுவல்,
பகலில் என் சிந்திப்பு;
நீர் ராவில் என் அடைக்கலம்,
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்,
விழிப்பில் என் குறிப்பு.

6. ஆ, ஒப்பில்லாத அழகே!
நான் எத்தனை சொன்னாலும்
என் நாவினாலே கூடாதே;
நான் என்ன வாஞ்சித்தாலும்
அதெல்லாம் நீரே, இயேசுவே
ஆ, தயவுள்ள நேசரே,
நீர் என்றும் என்னை ஆளும்.

Credits
Words: J.Ch.Lange 1756
Translated by Johann Philip Fabricius, 1711-1791
8.7.8.7.8.8.7

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: