Skip to content

நாம் ஆனந்தங்கொள்ள (Tell Me Why We Should Not Be Extremely Happy?)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]
Lyric
1. நாம் ஆனந்தங் கொள்ளத் தடை ஏதும் உண்டோ
நல் நம்பிக்கை விஸ்வாசத்தாலாயிற்றே
போராட்டங்கள், சோதனை, துன்பத்தினூடே
பெரும் மகிமை தரிசனம் உண்டே
தைர்யம் கொள்! அஞ்சாதே முறுமுறுக்காதே
துன்பத்தில் போராடும் ஒவ்வோர் ஆத்மாவும்
போரில் வென்று பெறும் மகிமை ஒப்பிட்டால்
பாரில் துன்ப நாட்கள் மிக அற்பமே

பல்லவி
சோதனைகளைச் சிலுவையில் அறைந்தால்
சொந்தமாகும் கிறிஸ்தின் மகிமையெல்லாம்
களிப்புடன் எதிர்பார்த்துப் பாடல் தோன்றும்
கர்த்தரை நாம் நித்ய வீட்டில் துதிப்போம்

2. பேரானந்தங் கொள்! சோதனைகளை எல்லாம்
பேரின்பமாய்க் கொள்ள வேதம் சொல்லுதே
விசுவாசித்துப் பொறுமையாய் சகித்தால்
வெற்றியாம் பூரண ஜீவன் உனதே
அல்லேலூயா! அல்லேலூயா! மகிழ்கின்றோம்
அல்லேலூயா! துதி, புகழ் அவர்க்கே
தேவ ஆட்டுக் குட்டி தந்தார் இந்த மீட்பு
பாவம் சாபம் போக்கி நம்மை மீட்கிறார்

3. பாவம், தீமைகள் நிறைந்த பூமி நீங்கப்
போகும் இன்ப மீட்பின் நாளை ஆசிப்பாய்
இங்கே கண்ணீர் கதறலுடன் போர் செய்தோம்
அங்கே வெற்றிப் பாடலோடு சேருவோம்
இனி ஒரு போதும் பிரியவே வேண்டாம்
நித்யமும் ஒன்றாகவே நாம் இருப்போம்
சொந்த வீடு சேர்வோம் என்ன பேரானந்தம்
இந்த மகிமை இயேசுவோடெந்நாளும்

Credits
Words: Marie Johansen, Norway
Translated from English to Tamil by M. Premkumar

Transliteration
Pending

Hymn in English
1. Tell me why we should not be extremely happy?
When by faith we’ve such a hope we see and trust!
Throughout battles, trials and toils we have a vision
Of the glory which shall be revealed in us.
Grasp then courage, yea be bold and do not murmur,
For these sufferings last but a little while
When compared to glory that is always opened
For each soul who battles diligent each mile.

Chorus
Be then crucified with Him in each temptation,
For this glory which Christ has shall be our own.
Songs of praise burst forth in our glad expectation.
We shall praise Him then in our eternal home.

2. “Be exceeding happy,” don’t forget it’s written,
“Count it all joy. . .” in temptation which you meet.
It will bring you life, and that in great abundance.
Just believe, endure, and yours the victory!
Hallelujah! Hallelujah! We’re rejoicing!
Hallelujah! Praise and honour to God’s Lamb!
Who hath given to us such a great salvation,
Yes, He frees us now from all our sin and shame.

3. O, look forth, then to the day of our redemption,
From this evil earth, so full of sin and wrong.
Here with many tears and cryings we have battled.
There, we’ll join together in triumphant song.
And we there shall nevermore be separated;
But together be for all eternity.
Soon we home will come, O what great joy and gladness!
In that glory great, with Jesus, ever be.

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: