நான் தேவரீரை, கர்த்தரே
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. நான் தேவரீரை, கர்த்தரே,
துதிப்பேன்; அடியேன்
எல்லாரின் முன்னும் உம்மையே
அறிக்கை பண்ணுவேன்!2. ஆ, எந்தப் பாக்கியங்களும்
உம்மால்தான் வருதே,
உண்டான எந்த நன்மைக்கும்
ஊற்றானவர் நீரே.3. உண்டான நன்மை யாவையும்
நீர் தாறீர், கர்த்தரே;
உம்மாலொழிய எதுவும்
உண்டாகக் கூடாதே.4. உம்மாலே வருஷாந்திரம்
அல்லோ பிழைக்கிறோம்;
உம்மாலே நாங்கள் விக்கினம்
வந்தாலும், தப்பினோம்.5. ஆ, களிகூர்ந்து பூரித்து
மகிழ், என் மனதே,
பராபரன்தான் உனது
அனந்த பங்காமே.6. அவர் உன் பங்கு, உன் பெலன்,
உன் கேடகம், நன்றாய்
திடப்படுத்தும் உன் திடன்;
நீ கைவிடப்படாய்.7. உன் சிறு வயது முதல்
பராமரித்தாரே;
கர்த்தாவால் வெகு மோசங்கள்
விலக்கப்பட்டதே.8. கர்த்தாவின் ஆளுகை எல்லாம்
தப்பற்றதல்லவோ;
அவர் கை செய்கிறதெல்லாம்
நன்றாய் முடியாதோ.9. ஆகையினால் கர்த்தாவுக்கு
நீ பிள்ளைப் பக்தியாய்
எப்போதுங் கீழ்ப்படிந்திரு,
அப்போதே நீ வாழ்வாய்.
Credits
Words: Paul Gerhardt, 1607-1676
Translated by Johann Phillip Fabricius, 1711 – 1791
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending