நற்செய்தி அறிவிக்கும்
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. நற்செய்தி அறிவிக்கும்
தூதாட்கள் பாதங்கள்
மா அந்தமே; ரட்சிக்கும்
இச்செய்தி கேளுங்கள்;
செத்த விக்கிரகங்களைத்
தள்ளி இயேசுக் கிறிஸ்துவைத்
தொழுங்கள் அவர் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்;
ஆம் சேனைகளின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்.2. தமது சாவினாலே
நம்மை இரட்சித்தார்.
பராக்கிரமத்தினாலே
பரத்துக்கேறினார்.
இந்தப் பலவானிடம்
வந்தால் மோட்சபாக்கியம்.
அவர் சேனையின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்;
ஆம் சேனைகளின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்.3. நானா ஜாதிகளான
பிதாவின் புத்திரர்
தேவாட்டின் பெரிதான
பந்தியில் சேர்பவர்
பல பாஷைகளிலே
இந்தப் பாட்டொலிக்குமே;
அவர் சேனையின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்;
ஆம் சேனைகளின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்
Credits
Words: R.Rudel
Translation from German to Tamil: A. Gehring
Tune: If the original tune is not available, an alternate is “Jesus Saves” by Kirk Patrick (used for the hymn “We have heard the joyful sound: Jesus saves! Jesus saves!” by Priscilla J. Owens 1829-1899)
7.6.7.6.7.7.7.6.7.6
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending