கர்த்தாவின் தூய ஆவியே (O Holy Ghost, Our Lord And Guide)
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. கர்த்தாவின் தூய ஆவியே,
நீர் எங்கள் ஆத்துமத்திலே
இறங்கி வாசம் பண்ணும்.
பர வெளிச்சமாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட
தெளிந்த நெஞ்சுங் கண்ணும்
தந்து, வந்து,
மெய் ஜெபத்தை நற்குணத்தைப் போதிவியும்.
மெய் மகிழ்ச்சியை அளியும்.2. நீர் போதிவிக்கும் வார்த்தையே
எப்போதும் எங்கள் நெஞ்சிலே
தீயாய் எரிவதாக.
பிதா சுதன் இருவரால்
இறங்கும் உம்மையும் அத்தால்
த்ரியேக தெய்வமாக
நல்ல, வல்ல,
பக்தியோடும் பணிவோடும் போற்றிப்பாடும்
வாக்கை எங்களுக்குத் தாரும்.3. கற்போடே எங்கள் நாட்களை
நடத்த எங்கள் ஆவியை
பலப்படுத்தி வாரும்;
பொல்லாத ஆசை இச்சையை
விலக்கி, அதடியாரை
விடந் தீண்டாதே காரும்.
ஆன, வான,
வாழ்வை நாடுஞ்சீரைத் தாரும் மோட்சங் காட்டும்
அத்தால் எங்கள் நெஞ்சை ஆற்றும்.
Credits
Words: Michael Schirmer, 1606-1673
Transliteration
Pending
Hymn in English
1. O Holy Ghost our Lord and Guide!
Come in Thy temple to abide
In hearts to Thee devoted.
Let Thy bright beams, Thou heavenly Light,
Dispel the darkness of our night;
Thy presence let be noted,
Come Lord, comfort,
Life and power on us shower
To Thee cry we,
On Thy own dear word rely we.2. Thou Fountain whence all wisdom flows,
Which God on pious hearts bestows,
Thy grace and truth let hear us,
That we in unity of faith
May set forth what Thy gospel saith
Before all far and near us.
Hear us, cheer us
By Thy teaching, that our preaching
Thy salvation
Soon may tell to every nation.3. Oh rule in us until the end
That all days of our life we spend
In true sanctification.
Help us all sinful lust to flee
And e’er to follow, led by Thee
Our heavenly vocation.
Prove us, move us,
That our feelings, words and dealings
Tend to heaven,
Where we’ll see what God has given.
Devotional thoughts/historical background
Pending