Skip to content

எந்தக் காலத்திலும்

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
ஏசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்.

சரணங்கள்
1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே

2. தாய் தந்தை நீரே – தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே

3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே

4. வானிலும் நீரே – பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே

5. தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே

Credits
Pending

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: