xx உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
Lyric
1. எல்லாம் வல்ல தேவனொருவர் பாத்திட்ருக்காரு
மறைவா அவருக்கொன்றுகூட செய்யலாகாது
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
2. சவுல் ராஜா ஆடு சில ஒளிச்சு வச்சாங்கோ
சாமுவேல் தீர்க்கதரிசி அதன் சத்தங் கேட்டாங்கோ
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
3. பலபல பல பாஷைன்னு பேசிண்டுடலாம்
ஆவியானவரோ நன்னா சலிச்சிஞ்டிருவாரு
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
(நோக்கு நன்னா புரியறதா?)
4. பெண்கள் சபையில் போதிப்பதை தேவன் விரும்பலே – ஆனா
வேறு பல ஊழியங்கள் அவர்களுக்குண்டு
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
5. டிராமா நடிப்பு சபையினுள்ளே பூரக் கூடாதே
அனனியா, சபீரா காட்சி கண் முன் நிக்கணுமே
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
6. உயிர்த்தெழுந்த இயேசு நம்ம தேவனல்லவா
நடைப் பிணங்களாக இனி இருக்கக் கூடாதே
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
7. ஜீவனுள்ள வளரும் விசுவாசிகளாம் நாம்
ஊசிப் போன கிறிஸ்தவனா இருக்கலாகாதே
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
8. மீசை வச்சு தோசை தின்னா மோசமில்லேங்க ஆனா
பாவத்திலே ஆசை வச்சா சாபந்தானுங்க
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
9. கடைசி காலம் வந்துடுச்சு வேதம் சொல்லுதுங்க
கிறிஸ்த்தின் வருகைக்காயத்தமா சுறுசுறுப்பாவோம்
ஏ, ராசா, உள்ளதை நான் சொல்ல வந்தேங்க
(ஒரு தீர்க்கதரிசி சபையாரை, ராஜாவாக பாவித்து, அவர்களுக்குப் போதனை செய்வது)
Credits
Melody: From a spanish folk song இராகம்: தென் அமெரிக்க கிராமியப் பாடல்
Author: Gnana Bhaktamitran
May 05
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending