தேவாதி தேவன் நம் கர்த்தருமாம்
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. தே /வாதி தேவன் நம் கர்த்தருமாம்
துதிஸ்தோத்ரம் அனைத்தும் அவர்க்கே.
நம் கோட்டையும் அரணும் பாதுகாப்பாம்
துதிகளின் மத்தியில் வாழ்பவராம்2. வல்லமை கனம் மகிமை யாவும்
உலகறிய பாடிப் புகழ்வோம்.
வானாதி வானங்களில் வீற்றிருப்பார்,
பூமி அவரது பாதபடியாம்.3. அ/வரின் அன்பும் பராமரிப்பும்
வி/வரிப்புக்கும் அப்பாற்பட்டது.
நம் சிரம் எண்ணையினால் ஆசி பெறும்.
அ/வர் வீட்டில் என்றும் நிலைத்திருப்போம்.4. ஏ/ழை அடியாரின் போற்றுதல்கள்
ஏ/ற்றுக் கொள்ளத் தயங்கிடார்.
சாஷ்டாங்கம் செய்து தொழுவோம் அவரை;
ராஜ்/யம் வல்லமை என்றும் அவரதே.
Credits
Words/translation by Gnana Bhaktamitran, inspired by the English hymn ‘O Worship The King’ by Robert Grant
Tune : Lyons, attributed to Johann M. Haydn (1737-1806)
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Yet you are holy, enthroned on the praises of Israel. (Psalm 22:3)