என் கர்த்தாவைத் துதியாமல்
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. என் கர்த்தாவைத் துதியாமல்
மௌனமாயிருப்பேனோ;
அவர் உண்மை மாசில்லாமல்
எதிலும் விளங்காதோ!
முடிவின்றி அவர்தாமே
தம்முடையவர்களை
தாங்கி ஆதரிப்பதை
பார்த்தால் வல்ல நேசமாமே
யாவுங் கொஞ்ச நிமிஷம்
தெய்வ நேசம் நித்தியம்2. இந்த மட்டுக்கும் இருக்கும்
ஜீவனைத்தாம் எனக்கு
தாயின் கர்ப்பத்தில் கொடுக்கும்
நாள் துவக்கி தமது
செட்டைகளினாலே நித்தம்
அவர் என்னை மூடினார்;
அன்புமாய் விசாரித்தார்;
நான் பிழைப்பதவர் சித்தம்.
யாவுங் கொஞ்ச நிமிஷம்
தெய்வ நேசம் நித்தியம்3. நரகத்தை நான் காணாமல்
வாழவே தயாபரர்
ஏக மைந்தனைப் பாராமல்
வாதைக் கொப்புவித்தவர்.
ஆச்சரியம் என்னை மூடும்;
தெய்வ அன்பின் ஆழமே!
உம்மை உலகத்திலே
யார் அளவறுக்கக் கூடும்!
யாவுங் கொஞ்ச நிமிஷம்
தெய்வ நேசம் நித்தியம்4. தெய்வ வசனத்தினாலே
என்னை உபதேசித்து,
திட விசுவாசத்தாலே
நான் நிரம்ப எனக்கு
தமதாவியையுந் தாறார்.
என்னை அவர் பற்பல
நோவில் தேற்றி, உத்தம
பாதையில் நடத்தி வாறார்.
யாவுங் கொஞ்ச நிமிஷம்
தெய்வ நேசம் நித்தியம்5. தெய்வ அன்பு மட்டுத்திட்டம்
அற்றதாமே, ஆகையால்,
கர்த்தரே, நான் உம்மை நித்தம்
திட விசுவாசத்தால்
அண்டிக் கொண்டிருக்க நீரே
கிருபை அளியுமேன்
என்று கெஞ்சிக் கேட்கிறேன்
நித்த நேசர் தேவரீரே!
யாவுங் கொஞ்ச நிமிஷம்
தெய்வ நேசம் நித்தியம்
Credits
Paul Gerhardt, 1676
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending