Skip to content

என் இதயத்தில் ஒரு நாள்

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. என் இதயத்தில் ஒரு நாள்
இம்மண்ணின் கவலைகளால்
கலங்கையில் என் இயேசுவை
நினைத்தால் தாவிளை.
ஆ, இந்தத் துக்கம் வேணுமோ
எனக்கு இயேசுதான் அல்லோ
இம்மண்ணின் துக்கம், கவலை
பொல்லாங்கன் சோதனை.

2. அப்போது என்னை சுவாமியார்
மா தயவாய்க் கண்ணோக்கிறார்.
பயப்படாதிரு, நாம்தாம்
உனக்குத் துணையாம்
என்றாற்றுவார், நான் உடனே
ஓர் கீர்த்தனத்தைப் பாடச்சே
கிலேசம் யாவும் போய்விடும்,
என் நெஞ்சு பூரிக்கும்.

3. இவ்வண்ணமாக இயேசுவின்
வெளிச்சத்தை நான் துக்கத்தின்
இராவில் கண்டு நெஞ்சிலே
அமர்ந்திருப்பேனே!
ஆகையினால் எந்நேரமும்
மகிழ்ச்சியாகிப் பாடவும்,
உன் நேசமுள்ள இயேசுவை,
என் உள்ளமே, நினை.

Credits
Words: R.Rudel
Translation from German to Tamil: A. Gehring

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
A family recording in 1986 WithF_EnIdayathil

%d bloggers like this: