Skip to content

ஆனந்தமாய் நாமே

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
இப்புது தினமதிலே

பல்லவி
ஆத்துமாவே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

2. கடந்த நாட்களில் கைவிடாமலே
கண்மணி போல் எம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்.

3. படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மை
காத்தாரே அல்லேலூயா

4. யோர்தானைக் கடந்தோம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழுவோம்.

5. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்.

Credits
Pending

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: