Skip to content

நறுமலர்க்கொத்து

CHRISTIAN PROVERBS AND MAXIMS

நறுமலர்க்கொத்து

இதில் ஞானப் பழமொழிகளும், ஞானத் தொடர்மொழிகளும் அடங்கியிருக்கின்றன

முகவுரை

மானிட இருதயமாகிய நிலத்தில் வேதவசனமாகிய வித்து விழுந்து, திருவருளாகிய மழையால் நனைந்து, விசுவாசமாகிய பயிராய் முளைத்து, நல்லெண்ணங்களாகிய அரும்பு கட்டி, நல்லுரைகளாகிய மலர்களாய்ப் பூத்து, நற்கிரியைகளாகிய கனிகளைப் பிறப்பிக்கும். நாம் சிலகாலமாயுலாவித் திரிந்த நந்தவனங்களிற் கொய்திணைத்த பூங்கொத்துகளிற் சிலவற்றை நமது தோட்டத்து எசமானுக்குப் பாதகாணிக்கையாகக் கொண்டு வருகின்றோம். இச்சிறு நூலின் முற்பாகத்தடங்கிய மலர்களிற் சிலவும், பிற்பாகத்தில் மிச்சமானவையும் நம் சுய தோட்டத்து உற்பத்தியானவையாய் இருக்க, அவற்றிற்கும் நாமே நறுமைப்பட்டஞ் சூட்டுவது சற்று விபரீதமாகத் தோன்றும். உண்மையில் அவைதாமே நறுமையுடையனவல்லாவிடினும், ஏனை மலர்களின் சேர்க்கையால் அவற்றிற்கும் நறுமை பொருந்துவதாக நம்பி அங்கனம் உரைக்கலானோம். பூவோடு கூடிய நாரும் மனம் பெருமன்றோ! இந்த நறுமலர்களின் சிறு கொத்து தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் மனதுக்கும் வாக்குக்கும் மணமூட்டச் சிற்றுதவியாயிற்றென்று அறியும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமாகில் அமலனுதவியால் மறுபதிப்பில் சற்றுப் பெருங்கொத்தைச் சேர்த்துக் கொடுப்போமென நம்புகின்றோம்.

கிருபாகர மூர்த்தியாகிய இரட்சகர், இம்மலர்க் கொத்தைப் பாதகாணிக்கையாக அங்கிகரித்து ஏற்றாலும் தமது திருநாமத்திற்கு மகிமை வர அருள்புரிவாராக.

                                                                                          ஞா.சா.

______________________________________________________________
ஞானப் பழமொழிகள்

1. அடாததைக் கேட்டால் – கொடாதேயும் அப்பா.

2. அட்டதரித்திரக் கிறிஸ்தவனும்
அளவில்லாத சம்பன்னன்.

3. அப்பனுக்குப் பயமோ – அடிக்குப் பயமோ.

4. அமர்ந்த ஒரே வார்த்தைக்கு
ஆயிரம் வீரர் பெலனுண்டு.

5. அருமை மீட்பரை அறிந்தவன்
பெருமையை நீக்கத் தெரிந்தவன்

6. அளவிலா நேசக் கர்த்தர்
அளவிலாத் துதிக்குப் பாத்திரர்

7. அறிவாளிகள் மிச்சம் – விசுவாசிகள் சொற்பம்

8. ஆசையும் பழக்கமும் – அனைத்தையும் லேசாக்கும்

9. ஆண்டவர் என் சொந்தமானால்
வேண்டியது ஒன்றுமில்லை

10. ஆண்டவர் வருஞ்சமயம் – ஆர் அறிவார் விழித்திரு

11. ஆதாம் இழந்ததைப் பார்க்கிலும்
கிறிஸ்து கொணர்ந்தது அதிகம்

12. ஆத்தும வளர்த்திக்கு – அவசியம் துன்பம்

13. ஆத்துமத்தின் பசிக்கு – ஆன போசனங் கிறிஸ்து

14. ஆத்துமத்தின் தலையணை
ஆண்டவரின் நெஞ்சுதான்.

15. இடறலுண்டுபண்ணாதே
இடறலும் பட்டுக்கொள்ளாதே

16. இயேசுவென்ற வெளிச்சமின்றி
இருள் நிறைந்தது லோகம்.

17. இருவர் செபித்தால் – நடுவர் கிறிஸ்து

18. இலக்கிலா வாழ்வு – துக்கமான வாழ்வு.

19. இலட்சாதிபதி இம்மையில்
பிச்சைக்காரன் மறுமையில்.

20. இல்லான் கவலை ஒரு பங்கானால்
உள்ளோன் கவலை ஒற்றிக்கிரட்டி.

21. இஷ்டர் எட்டிப் போனாலும்
கர்த்தர் கிட்டி நிற்பார்.

22. இம்மையின் பாடுகள் – மறுமையின் ஒளஷதம்.

23. இம்மையின் இறப்பு – மறுமையின் பிறப்பு.

24. இனியிருப்பதைச் சொல்லாதே
இப்போதிருப்பதைச் சொல்.

25. இன்பமான வார்த்தைகளல்ல
இருதய மூச்சே செபமாம்.

26. இன்றைக்கப்பம் – இதுவே போதும்

27. இன்று கிறிஸ்து வருவாரானால்
எதிர்கொண்டுபோக ஆயத்தமா?

28. இன்று விதைப்பு – நாளையறுப்பு

29. உத்தமநேசர் – கர்த்தர் ஒருவர்தான்

30. உயர்வான மோட்சம் போகத்
தாழ்வாகத் துவக்க வேணும்

31. உலகங் கொடுக்கும் உத்தம ஈவும்
உன்னத ஈவுக்கொன்றுமில்லை

32. எத்தலம் போயினுங் – கர்த்தனையறிவி

33. என்னத்தை நம்பினாலும்
உன்னைத்தான் நம்ப வேண்டாம்

34. ஏதெதை விடினும் – நாதனை விடாதே

35. ஏற்கனவே கர்த்தருக்குத் – தீர்க்கமாக உன்னைத் தா

36. ஒரே மாதிரியல்ல – ஒரே மனது முக்கியம்

37. கடமை செய்வது நாம் – கர்த்தர் தருவது பலன்

38. கண்ணினாலே செய்த பாவம்
எண்ணினாலும் முடியாது

39. கண்டிப்பாக உன்னைப் பார்
கருணையாகப் பிறரைப் பார்

40. கர்த்தராலே கூடாத – கவைகாரியம் ஒன்றுமில்லை

41. கர்த்தரின் தோழ்மையே – உத்தம தோழ்மை

42. காலைப் பிரார்த்தனையற்றால்
மாலைத் தோத்திரமில்லை

43. கிருபையெத்தனங்கொண்டுதான்
பரம நன்மைகள் பெறலாம்

44. கிறிஸ்தவ மனுஷன் – மரிப்பதற்கஞ்சான்

45. கிறிஸ்தவனுக்குச் சாவு – கிருபையென்பதுண்மை

46. கிறிஸ்தவன் வாழ்வே – மகத்துவ வாழ்வு

47. கிறிஸ்தவன் கடமை – கிறிஸ்தவனாக்கல்

48. கிறிஸ்துவின் ஊழியம் – மகத்துவ ஊழியம்

49. கிறிஸ்துவின் ஈவு – முதல்தர ஈவு

50. கிறிஸ்துவுக்கென்று தினந்தோறுங்
கிஞ்சித்தாகிலுஞ் செய்

51. கிறிஸ்துவுக்குச் சத்துரு – சாத்தானுக்கு மித்துரு

52. கிறிஸ்துவைத் தள்ளுவோர் – பயித்தியக்காரர்

53. கிறிஸ்துவை உடையவன்
அனைத்தையும் உடையவன்

54. கிறிஸ்துவையன்றி – கறுத்தது இதயம்

55. கிறிஸ்துவையன்றி – மகத்துவமில்லை

56. கைக்கொள்ளாத சத்தியத்தைக்
கற்காதிருந்தால் உத்தமம்

57. கையிருப்பல்ல – நல்லிருப்பே பொக்கிஷம்

58. கொஞ்சஞ்சொல்லி – மிஞ்சச் செய்

59. கொடுக்க மனதிருந்தால்
எடுக்கப் பொருள் கிடைக்கும்

60. கொடுத்து நிரப்பவே – எடுத்துக் குறைக்கிறார்

61. சங்கை இன்பம் ஆதாயம்
தற்காலத்தார் தேவர்கள்

62. சத்தியந் தந்தவரே – சக்தியுந் தரவேண்டும்

63. சந்தோஷ வாழ்வை விரும்புவோன்
சாமிக்கென்று வாழவேண்டும்

64. சமயோசித வாக்கும் முகமுந்
தங்கங் கொடுத்தாலும் ஈடல்ல

65. சம்பாத்தியமென்னும் அரும்பு
தருமமாகப் பூக்கட்டும்

66. சம்மதிக்கானைச் சாத்தானும் ஆளான்

67. சர்வதிஷ்டிக் கர்த்தருக்குச்
சகல நினைவுஞ் செய்கை போல

68. சன்மார்க்கரென்ற எத்தனை பேர்
சாமிக்குத் தூரந் தெரியுமா?

69. சாபத்துக்கஞ்சுமுன் – பாவத்துக்கஞ்சு

70. சாமி சித்தம் நமதானால்
தாழ்ந்த பூமியும் மோட்சமாகும்

71. சாவுக்கஞ்சுவோர் – சீவிகளல்ல

72. சீவனான கிறிஸ்துவையன்றி
சீவியமென்ன சாவுதான்

73. சிற்றின்பத்தின் சிநேகமுடையோன்
மற்றின்பத்துக்கு மாலுமியல்ல

74. சீவியத்தின் எந்நாளும்
திரும்பிவரப் போறதில்லை

75. சுகவீனத்தில் தீர்மானிப்பதைச்
சுகநேரத்தில் மறக்கலாமா?

76. சுக்கான் பிடிப்பவர் கிறிஸ்துவானால்
சொகுசாயோடுஞ் சீவியக் கப்பல்

77. சும்மாயிருக்குஞ் சோதனைக்காரனைத்
தூண்டிவிடுவோர் எத்தனைபேர்!

78. செபமில்லாத தீர்மானங்கள்
சிரிப்புக்கானது சாத்தானுக்கு

79. செபமில்லான் – சீவனில்லான்

80. செபமோங்க – செயமோங்கும்

81. செபமும் முயற்சியுங் கூடி
செனிப்பித்த நன்மைகள் மிகுதி

82. செபஞ் சொல்வோர் எல்லாரும்
செபஞ் செய்வது நிச்சயமா?

83. செபம் தியானஞ் சோதனை
சிறந்த சாஸ்திரியாக்கும்

84. செபிக்கப் படித்த எத்தனை பேர்
பொறுக்கப் படிக்காதிருக்கிறார்!

85. செய்யத் தக்கதை உடனே செய்
செய்யத் தக்கதை நன்றாய்ச் செய்

86. ஞானத்துக்கு வேலி மோனம்

87. சொந்தத்துக்குத் தங்கமும் – சுவாமிக்குச் செம்புமா

88. ஞானப் பொக்கிஷந் – தான் மெய்ப் பொக்கிஷம்

89. ஞானாபரணப் பெட்டியோ
வீணாபரணப் பெட்டியோ (நீ)

90. தகப்பனற்ற பிள்ளை – தாரணியில் இல்லை

91. தக்க வார்த்தை ஒரு பொன்னானால்
தக்க மௌனம் இரு பொன்னாகும்

92. தம்மால் எத்தனை நன்மை என்று
தாமே அறியார் கிறிஸ்தோர்கள்

93. தற்சிநேகந் துன்பம் – நற் சிநேகமே யின்பம்

94. தன்னயன் போகும் வழி – தவறாத நரக வழி

95. தன்னுயிரைப் போலே யார் – மன்னுயிர்க்கிரங்கிறார்?

96. தன்னையறிவது நலம் – கிறிஸ்தையறிவதே பலம்

97. தன்னைத்தானே யறியாதான்
தேவனை யறிவதெப்படி?

98. தன்னையுங் கிறிஸ்தையுமறிந்தவன்
சர்வசாஸ்திரப் பண்டிதன்

99. திரண்ட பணமோ
திருப்திகரமோ. (ஐசுவரியம்)

100. திருத்தமல்ல – பிறப்பே அவசியம்

101. திருநாளின் மெய்க் கொண்டாட்டம்
சீவிய பொக்கிஷச் சேர்மானம்

102. திருப்தி கற்றவன் – தரித்திரமற்றவன்

103. திருப்தியற்ற மனுஷனுக்கு
இருப்பதென்ன? ஒன்றுமில்லை

104. திருப்தியுள்ள வீடு – சிறந்த ராஜ மாளிகை

105. தினப் போசனந் தேவை போல்
தேவ கிருபையும் தேவையாம்

106. துத்தியப் பிரியன் – முற்றிலும் மூடன்

107. துரித விவாகம் – நெடிய விசாரம்

108. துலுக்கிப் பிலுக்கும் பேர்களின்
துலக்கமும் அழகும் நிசமல்ல

109. துன்பக்கூடஞ் – செபப் பீடம்

110. துன்பம் நன்மை செய்வது போல்
இன்பம் உனக்குச் செய்யாது

111. தூரமாக்கும் யாவுக்கும் (என்னைத்)
தூரமாக்கும் கர்த்தாவே

112. தேவ கிருபையில்லாதவன் – சீவனற்ற மனுஷன்

113. தேவபத்தியே – சிறந்தோராக்கும்

114. தேவ பயமுள்ளோன் – வேறு பயமில்லான்

115. தேவ வசனம் -சீவ வசனம்

116. தேவனுக்கும் மனுஷனுக்குஞ்
சிறந்த அஞ்சல் செபமல்லோ

117. தேவனை உனக்குப் பொன்னாக்கு
பொன்னைத் தேவனாக்காதே

118. தேவனோடு வாழ்பவன் – சீவனோடு வாழ்பவன்

119. தேவையான ஒன்றே நாம் – தேடினால் மா நன்றே

120. நடந்து காட்டாப் பிரசங்கம்
முடிந்து தீராப் பிரசங்கம்

121. வேலை நமக்கில்லா நேரம்
வேலை நேரமாம் பேய்க்கு

122. நம்மில் நாமே பலவீனர் – நமது கிறிஸ்தில் கன வீரர்

123. நரகத்துக்கும் மோட்சத்துக்கும்
நமது பூமி போர்க்களம்

124. நரகத்தையும் மோட்சத்தையும்
நமது நாவில் காணலாம்

125. நரன் நினைப்பதன்று – பரனுரைப்பதே நன்று

126. நரன் மனதின் கேட்டைப்
பரன் ஒருத்தர் அறிவார்

127. நல் நினைவாகிய பூ மொக்கு – நற் கனியானால் தாவிளை

128. நல்ல துவக்கம் – பாதி முடிவு

129. நல்ல மனிதன் – கண் கண்ட பிரசங்கம்

130. நன்றியற்றோர்க்கும் – நன்றே செய்க

131. நாவை ஆள விரும்புவோன்
மனதை ஆள்வதவசியம்

132. நாளையத் தினம் சீக்கிரம் – நேற்றைய தினமாகும்

133. நாளை என்கிறான் மனிதன்
இன்று என்கிறார் சுவாமி

134. நாள் கணக்கைப் பார்க்கிலும்
நடைக் கணக்கே முக்கியம்

135. நானடைந்த நன்மையெல்லாம்
வானந் தந்த நன்மையே

136. நான் என்கிற மாலுமி – நரகத்துக்கே ஓட்டுவான்

137. நானெனக்கு ஒன்றுமில்லை
கிறிஸ்து எனக்கு எல்லாமானார்

138. நெறியிதென்று அறிந்தாலும்
சரியாய் நில்லார் எத்தனை பேர்!

139. நேசிப்போரை நீயும் நேசி
நேசியாரையுங்கூட நேசி

140. படித்தறிந்த எத்தனை பேர்
நடக்க அறியாதிருக்கிறார்

141. பணத்தைக் கொடுத்துக் குணத்தைப் பார்

142. பத்தரைக் குற்றஞ்சாட்டுவது
சத்துருப் பேயின் வேலை

143. பத்திக்கடுத்தது – சுத்தி

144. பத்தியும் விவேகமும் – பக்க வீட்டுக்காரர்

145. பத்தியுஞ் சுத்தமும் – பட்சமுள்ள சிநேகிதர்

146. பரம நகருக்கொரே வழி
பொக்கிஷமான கிறிஸ்துதான்

147. பரலோகங் காணி – ஜெபம் அதற்கு ஏணி

148. பரனோடு போர் செய்தல் – பயங்கரமான காரியம்

149. பரிகாரியும் மருந்துமல்ல
பராபரனே சுகங் கொடுப்பார்

150. பரிசுத்தமானதைக் கரிசித்துத் தேடு

151. பலியைப் பார்க்கிலும் – பணிவு நல்லது

152. பாவங் கெடுத்ததைப் பார்க்கிலும்
கிறிஸ்து கொடுப்பது அதிகம்

153. பாவஞ் செய்வதைப் பார்க்கிலும்
பாடுபடுவதே உத்தமம்

154. பாவத்தின் நாசர் – பாவியின் நேசர்

155. பாவத்துக்கு மரிப்போம்
கிறிஸ்துவுக்குப் பிழைப்போம்

156. பாவத்துக்காகக் கிறிஸ்து மரித்தார்
பாவத்துக்கு நாம் மரிப்போம்

157. பாவ பயமே பயம் – தன்னை வெல்வதே ஜெயம்

158. பாவமும் பாடும் – யாவர்க்கும் ஒன்றே

159. பாவமென்னும் நஞ்சுதான் – சாவைக் கசப்பாக்கும்

160. பாவம் அழியாவிட்டால் – பாவி அழிய வேணும்

161. பாவி மனதை ஆற்றுவது
பசும் பொன்னாலே முடியாது

162. பிலுக்கிகள் அழகு – குலுக்கினால் உதிர்ந்து போம்

163. பெரியவேஷம் பூண்டோரெல்லாம்
பெரிய மனுஷராவாரோ

164. பெருமை நிறைந்த இருதயத்தில்
அருமை மீட்பர்க்கிடமேது

165. பெற்றோர் சீவியம் – பிள்ளைக்குச் சட்டம்

166. பேர் இருந்தாப்போல் – பேர்வழி ஆவாரோ

167. பொறுமையென்ற சிறந்த புஷ்பம்
பூந்தோட்டமெங்கும் அகப்படாது

168. பொருளில்லாமை தரித்திரமானால்
திருப்தியில்லாமை பெருந் தரித்திரமாம்

169. பொன்தானே கெடுக்காமல்
பொன்னாசையே கெடுக்குது

170. போதனை செய்யுமுன் – போதனை நீ பெறு

171. போதுமென்ற மனது – போமிடமெல்லாம் பொன்

172. மரிப்பதற்கஞ்சாமல் – இருப்பதற்கஞ்சு

173. மனுஷ யோக்கியர் எத்தனை பேர்
மறு ஜெனனமாகாதோர்

174. மாய்மால வேஷம் – பேய்க்குத்தானும் துவேஷம்

175. மீட்பரையன்றி – மீட்பேயில்லை

176. முகத்தினழகிலும் – அகத்தினழகே நலம்

177. முகத்துக்கு முன்னே புகழாதே
முகத்துக்குப் பின்னும் இகழாதே

178. முழங்காலும் வார்த்தையும் – முழுச் செபமல்ல

179. முறுமுறுப்பென்ற தெருவிலே
கிறிஸ்தவனுக்கு வீடில்லை

180. மெஞ்ஞானம் வேண்டுமானால்
வேத எழுத்தைக் கற்றாராய்

181. மேட்டிமையின் கல்லறையில்தான்
மெத்தனவென்னும் பூப் பூக்கும்

182. மோட்சத்துக்கும் நரகத்துக்கும்
முதல் துவக்கம் இங்கேதான்

183. வல்லபரன் நேசம் – எல்லையிலா நேசம்

184. வறுமைக்கஞ்சாதே – பெருமைக்கஞ்சு

185. வாங்க விரும்பும் எத்தனை பேர்
தாங்கள் கொடுக்கப் பிந்துகிறார்

186. வாழ்வில் உண்டாம் நலத்திலும்
தாழ்வில் உண்டாவது அதிகம்

187. வாழ்வுக்கு மாத்திரந் தோத்திரம்
தாழ்வுக்கு அது வேண்டாமா?

188. வானத்துக்கும் பூமிக்கும் – வாராவதி கிறிஸ்துதான்

189. வானராச்சியம் முந்தி – வயிற்றுக்காரியம் பிந்தி

190. விசுவாசம் என்கிற வீரனால்
வெல்லப்படாதது ஒன்றுமில்லை

191. விசுவாசப் பள்ளத்தாக்கு – அறிவு மலைக்கு வழி

192. விசுவாசியின் சீவியம்
ஒழியாச் செபமும் முடியாத் துதியும்

193. விதைப்பதில் அறுப்பு – போதிப்பதில் படிப்பு

194. வீண் கவலைக்குங் கிறிஸ்தவனுக்கும்
வெகுதூரம் இருக்க வேண்டும்

195. வெகுவான கவலைகட்கு
வீண் பெருமையே காரணம்

196. வேதத்துக்கு வியார்த்தி
வேதஞ் சொல்வதே நேர்த்தி

197. வேதமில்லாத வீடு – வேதாளம் வசிக்கும் காடு

198. வேலைக்குச் செபந் தடையல்ல
வேலைக்கதுவே துணையாகும்

199. வேலை வாங்குஞ் சகலர்க்குள்ளும்
பேயைப் பார்க்கக் கொடியவனில்லை

200. யோக்கியர் யாவரும் – பாக்கியராவாரோ

 

ஞானப் பழமொழிகள் :
பக்தமித்திரன்

1. முதற்பிறப்பு முற்றிலும் இறப்பு
கிறிஸ்துவில் மறுபிறப்போ நித்திய ஜீவிப்பு

2. கிறிஸ்தேசு எனக்கொரு பூச்செண்டு
நான் அதில் மொய்க்கும் வண்டு

3. என் மீட்பர் கிறிஸ்து, என் மேய்ப்பருங்கூட
நான் அவர் பின் செல்லும் ஆடுமாய் இருக்கிறேன்

4. நீயுனக்கு சொந்தம் அல்லவே
கிறிஸ்தேசுவினால் மீட்கப்பட்ட பாவி அல்லவா!

5. உலகஞ் சொல்லுது தன்னோடு சேர்ந்து வாழ்வென்று
வேதஞ் சொல்வதோ கிறிஸ்தேசுவில் அவருக்குள் வாழ் என்று

6. வேதாகமம் இருபுறம் கருக்குவாள்தனிலும் கூரே
இகபரம் இரண்டிற்கும் அதன் வழி நேரே

7. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்
அவர் நீதி எதிலும் விளங்காதா!

 

 

உம்மையே நம்பியிருக்கிறேன், என்னைக் கைவிடாதேயும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ27. சனி காலை ஜெபம்என் ஒன்றான மீட்பராகிய இயேசுநாதரே, தேவர்களில் உமக்கு ஒப்பானவன் ஆர். பரிசுத்தத்தில்மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்குஒப்பானவன் ஆர். உமது கிருபையால் நான் சென்ற இரவில் இளைப்பாறி இந்தப் புதுப்பகலைக் கண்டேன்.உமக்கு அனந்த ஸ்தோத்திரம். கர்த்தாவே, நான் துர்க்குணத்தில் உருவானவன். பாவத்தில்கர்ப்பந்தரிக்கப்பட்டவன் என்பதைத் தேவரீர் அறிந்திருக்கிறீர். என் இருதயத்தின் தோற்றுதல்சிறுவயதுமுதல் நித்தம் பொல்லாததாய் இருக்கிறது. இரட்சகரே, தேவரீர் எனக்கு இரங்கி, உமதுபரிசுத்தஆவியை எனக்குத் தந்து, நான் என் பொல்லாத ஆசை இச்சகளைச் சிலுவையில் அறைகிறதற்குத்துணை செய்தருளும். இந்த நாளில் நான் என் இரட்சிப்பைப் பயத்தோடும் நடுக்கத்தோடும்நடப்பிக்கத்தக்கதாக உமது ஆவி என் பலமும், உமது வசனம் என் வழிகாட்டியுமாயிருக்க விரும்புகிறேன்.இயேசுவே, என் விருப்பத்தை நிறைவேற்றியருளும். தேவரீர் உமக்குப் பயந்தவர்களுக்குவைத்திருக்கிறதும், உம்மை நம்புகிறவர்களுக்கு நீர் உண்டுபண்ணினதுமான நன்மைகளை அடியேனும்அனுபவிக்கச் செய்தருளும். கர்த்தாவே, உம்மை நோக்கியிருக்கிறேன். உமது திருச்சித்தத்தின்படி எனக்குஆகக்கடவது, சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ28. சனி மாலை ஜெபம்சகல நன்மைகளுக்கும் காரணராகிய பராபரனே, சென்ற பக−லும், சென்ற வாரம் முழுமையிலும்தேவரீர் எனக்குச் செய்துவந்த உபகாரங்களுக்காக உம்மைப் புகழ்ந்து போற்றுகிறேன். உமது தயவை நான்நினைக்கும்பொழுது, என் பாவத்தையும் நன்றிக்கேட்டையும் நினைத்து துக்கப்படுகிறேன். ஆண்டவரே,நான் உமது கற்பனைகளை மீறினதால் உமது உபகாரங்களில் எதுக்கும் நான் பாத்திரவானல்லவென்றுஅறிக்கையிடுகிறேன். தேவரீர் எனக்கிரங்கி, என் பேரில் உமது திருக்கரத்தை வைத்து: மகனே, திடன்கொள்,உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று அடியேனுக்குச் சொல்லும். அப்பொழுது நான்சந்தோஷத்தோடு படுத்துச் சமாதானமாய் இளைப்பாறுவேன். இயேசுவே, நான் மரணநிழ−ன்பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். ஏனென்றால் உம்முடைய கோலும் உம்முடையதடியும் என்னைத் தேற்றுகிறது. ஆண்டவரே, தங்கள் முடிவை நினையாமலும் அதற்குத் தங்களைஆயத்தப்படுத்தாமலும் இருக்கிற நிர்விசாரிகளுக்குத் தேவரீர் இரங்கி, அவர்களைத் தட்டியெழுப்பி,அவர்களுக்கு மெய்யான குணப்படுதலைக் கட்டளையிடும். இந்த இரவில் நான் என்னையும், என்சகோதரரான சகல கிறிஸ்தவர்களையும் உமது பாதுகாப்புக்கு ஒப்புவிக்கிறேன். உமது அடியாரைக்கிருபையாய் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜமூன்றாம் வாரம்ஜஜஜஜஜஜஜஜஜ29. ஞாயிறு காலை ஜெபம்ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவே, தேவரீர் ஞாயிற்றுக்கிழமை மரித்தோரில் இருந்துஎழுந்ததால், நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் உமது உயிர்த்தெழுதலை நினைத்து உம்மைமகிமைப்படுத்த எனக்கு பெலன் தாரும். உம்மையல்லாமல் நான் பாவி, உம்மாலோ நான் நீதிமான்.உம்மையன்றி நான் மரணத்துக்குள்ளானவன், உம்மாலோ நான் சீவனைப் பெற்றவன். கர்த்தாவே, தேவரீர்எனக்கு சம்பாதித்த நீதியையும் ஜீவனையும் நான் எப்போதும் வாஞ்சிக்கத்தக்கதாய் என் பாவக்கேட்டைநான் உணர்ந்துகொள்ளப் பண்ணும். வெளிச்சம் உண்டாகக்கடவது என்றவுடனை வெளிச்சம்உண்டானதுபோல் உமது வசனத்தால் என் இருண்ட இருதயத்தில் இன்று வெளிச்சம் உதிக்கப்பண்ணும்.ஆண்டவரே, இன்று உமது வசனத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கிறதற்கு என் கண்களைத்திறந்தருளும். தங்கள் பாவ நிர்ப்பந்தத்தையும், நியாயத்தீர்ப்பையும், நரகக் கொடுமையையும் நினையாமல்காலங்கழிக்கும் நிர்விசாரரைத் தேவரீர் உமது வாக்கின் வல்லபத்தால் குணப்படுத்தியருளும். கர்த்தாவேஎன்னைத் திருப்பும், அப்பொழுது திரும்புவேன்; என்னை நடத்தும், அப்பொழுது நடப்பேன்; என்னைஇழும். அப்பொழுது பின்செல்லுவேன். நீர் இந்தத் திருநாளின் ஆசீர்வாதத்தை எனக்கும் எல்லாக்கிறிஸ்தவர்களுக்கும் பரிபூரணமாய்க் கட்டளையிட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

30. ஞாயிறு மாலை ஜெபம்திரியேக பராபரனாகிய கர்த்தாவே, தேவரீர் என்நை இன்று முழுவதும் காப்பாற்றி, என்ஆத்துமத்தையும் சரீரத்தையும் போஷித்து ஆசீர்வதித்ததற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இத்திருநாளில்நான் அறிந்தும் அறியாமலும் செய்த எல்லாப் பாவங்களையும் தேவரீர் கிருபையாய் மன்னித்து, நான்சமாதானமும் சந்தோஷமுமாய் இந்நாளை முடிக்கப்பண்ணியருளும். என் நேசமுள்ள ரட்சகர் சம்பாதித்தநீதியால், என்னைப் போர்த்து, அவருடைய சகல ஆசீர்வாதங்களாலும் என்னை நிரப்பியருளும். உம்மால்ஆசீர்வதிக்கப்பட்டவனை யார் சபிக்கக்கூடும். கிறிஸ்துவின் நீதியைப் போர்த்தவனை யார் குற்றஞ்சாட்டலாம். இந்த விசுவாசத்திலே என்னைப் பாதுகாத்தருளும். இந்த இரவில் நான் என்னையும், என்உபகாரிகள் பெரியோர் சிநேகிதரையும் உமது திருக்காப்புக்கு ஒப்படைத்து, இளைப்பாறி நித்திரை செய்யப்போகிறேன். உமது கிருபையும் ஆசீர்வாதமும் என்பேரிலும், என்னை ஜெபம் செய்யக் கேட்டுக்கொண்டயாவர் பேரிலும் வந்து தங்குவதாக. கர்த்தாவே எனக்கிரங்கும், கிறிஸ்துவே எனக்கிரங்கும், கர்த்தாவேஎனக்கிரங்கும் ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ31. திங்கள் காலை ஜெபம்எல்லா நல்லீவுகளுக்கும் ஊற்றாகிய பராபரனே, போன இரவிலே யாதொரு மோசமும் எனக்குநேரிடாமல் பாதுகாத்த உமது கிருபையை வணங்கித் தோத்தரிக்கிறேன். என் ஆத்துமத்தையும் சரீரத்தையும்உமது அரவணைப்பில் ஏற்றுக் கொள்ளும். உமது கிருபையையும் ஆசீர்வாதத்தையும் எனக்குக்கட்டளையிடும். இன்று நான் பாவத்துக்கு நீங்கலாயிருந்து, என் வேலையையெல்லாம் உமக்கேற்றவிதமாய்ச்செய்யும்படி எனக்கு மெய்விசுவாசத்தைத் தந்து என்னை அதிலே காப்பாற்றியருளும். விசுவாசத்தைத்துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவே, தேவரீர் என் அந்தகாரப்புத்தியைத் தெளிவாக்கும். என்துர்ச்சித்தத்தை உமக்குக் கீழ்ப்படுத்தும். நல்லுணர்வை எனக்குள் உண்டுபண்ணும். நீர் என்னைச் சோதித்து,என் சிந்தனைகளை அறிந்துகொண்டு, என்னில் வேதனை உண்டாக்கும் வழி உண்டோவென்று பார்த்துஎன்னை நித்திய வழியிலே நடத்தும். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றுதிருவுளம்பற்றின உம்மிடத்திலே நான் எக்காலமும் உண்மையாய் நிலைத்திருக்கப்பண்ணும். எனக்கு என்னகுறைந்த போதிலும், உம்மைப் பற்றும் விசுவாசம் ஒருபோதும் குறையாமல் தினந்தோறும் அதிகரித்துவரக்கிருபை செய்தருளும். இன்று நான் செய்யும் வேலைகளையெல்லாம் தேவரீர் நலமாக முடியப்பண்ணி,சகலவிதப் பொல்லாங்குகளுக்கும் என்னை விலக்கமாய்க் காத்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ32. திங்கள் மாலை ஜெபம்கர்த்தாவாகிய பராபரனே, உம்மை நம்பி இன்று காலையில் எழுந்தேன். உமது கிருபையால் ஒருபகலைப் போக்கினேன். இப்பொழுது உமது அடைக்கலத்தில் இளைப்பாறப் போகிறேன். நீர் என்பாவங்களைப் பாராமல், உமது திருக்குமாரனின் புண்ணியத்தைப் பார்த்து, அவர் நிமித்தம் என்னை உமதுகிருபையென்ற செட்டைக்குள் ஏற்றுக் கொள்ளும். என் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு அவர்செய்யும் வேண்டுதலைக் கேட்டு, என்னை உறுதியான விசுவாசத்தில் காப்பாற்றும். விசுவாசிக்கிறேன்ஆண்டவரே, என் அவிசுவாசத்துக்கு உதவிசெய்யும் என்று கூப்பிட்ட அந்த ஏழையைப்போல் நான்கூப்பிடுகிறேன். எனக்குச் சகாயம் செய்யத் தீவிரியும். என் மகனே, நீ வேண்டுமென்றபடி உனக்குஆகக்கடவது என்று அடியேனுக்குச் சொல்−யருளும். இந்த இரவிலும் தேவரீர் எனக்குப் பலத்தகன்மலையும் அரண்மனையுமாயிரும். அப்பொழுது நான் பத்திரமாயிளைப்பாறுவேன், சுகமாய் நித்திரைசெய்வேன். ஆண்டவரே, என் சகோதரராகிய யாவருக்கும் இந்த இரவு நல்இளைப்பாறுத−ன்இரவாயிருக்கும்படி அனுக்கிரகியும். சேனைகளுடைய கர்த்தாவே என்னோடுகூட இரும். யாக்கோபுடையபராபரனே, தேவரீர் என் உயர்ந்த அடைக்கலம் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ33. செவ்வாய் காலை ஜெபம்சர்வவல்லவரே, பரமபிதாவே, அதிகாலையில் அடியேனுக்குச் செவிசாய்த்தருளும். என்னைச்சூழ்ந்திருக்கிற ஏழை அக்கியானிகள் உம்மை அறியாதவர்களாய் இருக்கையில், தேவரீர் எனக்கு உம்மைவெளிப்படுத்தியிருப்பதற்காக உம்மைத் துதிக்கிறேன், புகழுகிறேன், மகிமைப்படுத்துகிறேன். தேவரீர்சர்வவல்லவர், எனக்கு வேண்டிய யாவற்றையும் செய்து நிறைவேற்றுவீர். தேவரீர் ஞானமுள்ளவர்,எல்லாவற்றையும் எனக்கு நன்மையாய் முடிப்பீர். நீர் எங்கும் நிறைந்தவர், நான் வீட்டி−ருந்தாலும்வேலைக்குப்போனாலும் என்னோடிருக்கிறீர். நீர் எல்லாமறிந்தவர், என் உட்சீர் புறச்சீர் ஒன்றும் உமக்கு

மறைவாயிராது. ஆ, பிதாவே, உமது அன்பின் பெருக்கத்தையும், இரக்கத்தின் ஐசுவரியத்தையும் நான்பூரணமாய் நம்பி, என்னையும் என் ஊழியத்தையும், என் போக்குவரத்து நினைவு பேச்சு செய்கையாவையும் உமது நடத்துதலுக்கு ஒப்புவிக்கிறேன். என்னை ஆசீர்வதியும், என் பேச்சை ஆசீர்வதியும், என்வேலையை ஆசீர்வதியும், என் கா−ன் ஒவ்வொரு அடியையும் ஆசீர்வதியும். அப்பொழுது நான்சந்தோஷமும் சுகமுமாய் இந்த நாளை முடிப்பேன். உமது திருச்சித்தத்தின்படி எனக்கு ஆகக் கடவது,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ34. செவ்வாய் மாலை ஜெபம்அன்புள்ள பரம தகப்பனே, என்னை இந்த நாள் முழுவதும் தாங்கி ஆதரித்த உமது பாதபடியில்அடியேன் தெண்டனிட்டு உம்மை நமஸ்கரிக்கிறேன். என்னைச் சூழ்ந்திருக்கும் யாவும் உம்முடையஅன்புக்கும் தயவுக்கும் சாட்சி கொடுக்கின்றன. வானத்தையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும்,பகலையும், இரவையும் தேவரீர் எனக்கென்று படைத்தருளினீர். நீர் கொடுத்த உணவைப் புசித்து, உமதுநீரூற்றின் தண்ணீரைக் குடித்துப் பக−ல் வேலை செய்தேன். நீர் என்னுடைய இளைப்பாற்றிற்குக்கொடுத்தருளிய இரவில் நித்திரை செய்யப்போகிறேன். எனக்குக் கலக்கமற்ற நல்ல நித்திரையைத் தாரும்.பாவமும் வீணுமான நினைவுகளுக்கும், அசுத்த சொற்பனங்களுக்கும், துஷ்டர் பயத்துக்கும், கொள்ளைநோய்களுக்கும், சகலவித மோச விக்கினங்களுக்கும் என்னையும் என்னுடையவர்களையும் விலக்கிக்காத்தருளும். அடியேனுக்கு எந்தெந்த நன்மைகள் தேவையென்பதைத் தேவரீர் அறிவீர். அவைகளைஉமது பிதாவடைவான சித்தத்தின்படி எனக்குக் கட்டளையிட்டருளும். நான் ஒருபிடி சாப்பாட்டுக்காவது,ஒரு மிணறு தண்ணீருக்காவது, ஒரு ஜான் வஸ்திரத்துக்காவது பாத்திரானாயிராதிருந்தும், என் இரட்சகர்நிமித்தம் என் பாவங்களை எனக்குக் கிருபையாய் மன்னித்து என் ஜெபத்தை இரக்கமாய்க் கேட்டருளும்சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ35. புதன் காலை ஜெபம்பரமபிதாவாகிய ஆண்டவரே, காலமே என் சத்தத்தைக் கேட்பீராக. காலமே உமக்கு நேரே வந்துஆயத்தமாகிக் காத்திருக்கிறேன். கர்த்தாவே, உமது தயவைப் புகழுகிறேன். கிருபையைத் துதிக்கிறேன்.தேவரீர் என்னைப் புத்தியற்ற மிருகமாய்ச் சிருஷ்டிக்காமல், புத்தி சித்தம் உணர்ச்சியுள்ள மனிதனாய்ச்சிருஷ்டித்த உமது மட்டற்ற அன்புக்குத் தோத்திரம். தேவரீர் எனக்குக் கொடுத்திருக்கிற ஆத்துமத்தினாலும்சரீரத்தினாலும் இன்றும் என்றும் உமக்கு ஊழியஞ்செய்து, உம்மை எல்லாக்காலத்திலும் மகிமைப்படுத்தஉமது பரிசுத்தஆவியால் என்னை ஏவி எழுப்பியருளும். கர்த்தாவே, பாவத்தால் நான் உமது திருச்சாயலைஇழந்து பரிதபிக்கிறேன்; என்னை இரக்கமாய்க் கண்ணோக்கிப் பாரும். என்னை உமது திருக்குமாரனின்ஐக்கியத்துக்குட்படுத்தி, தெய்வசாயலை எனக்குள் திரும்பவும் உண்டுபண்ணியருளும். சுத்தஇருதயத்தைஎனக்குச் சிருஷ்டியும் பராபரனே, நிலைவரமான ஆவியை என்னுள்ளத்தில் புதிதாய் உண்டாக்கும்.ஒன்றான மெய்த்தெய்வமாகிய உம்மையும் நீர் அனுப்பின இயேசுக்கிறிஸ்துவையும் அறிகிற அறிவிலேநான் இந்நாளிலும் தேர்ச்சியடைய எனக்குத் துணைபுரியும். தேவரீர் எனக்குக் கொடுத்திருக்கும்பலத்தையும் வரத்தையும் உமது நாமத்தின் மகிமைக்கென்றே செலவிட ஒத்தாசை பண்ணும். உமக்கும்குமாரனுக்கும் பரிசுத்தஆவிக்கும் துதிதோத்திரமுண்டாவதாக, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ36. புதன் மாலை ஜெபம்சர்வஜீவ தயாபரரே, தேவரீர் சென்ற பகல் முழுவதும் உமது பரிசுத்த சம்மனசுகளை எனக்குக்கட்டளையிட்டுக் காப்பாற்றினீர். என் பாதம் கல்−ல் இடறாதபடிக்கு அவர்கள் என்னைக் கைகளில்ஏந்திக்கொண்டு போனார்கள் என்றறிந்து உம்மைத் தோத்தரிக்கிறேன். தகப்பனை, இந்த இரவிலும் உமதுபரிசுத்த தூதரை எனக்குக் காவலாக வைத்தருளும். உமது கற்பனைப்படி எனக்குப் பணிவிடை செய்யும்சம்மனசுகளை என் அசுத்த நடக்கையால் துக்கப்படுத்தாமல், நான் அவர்களைப் போல் மெய்யானபரிசுத்தத்திலே நடந்து, உமக்கு உண்மையும் உற்சாகமுமாய் ஊழியஞ்செய்கிற ஊழியக்காரனாக்கியருளும்.நான் சாகும் நேரம் சமீபிக்கும்பொழுது நீர் உமது பரிசுத்த தூதரை என்னண்டைக்கு அனுப்பி, ஏழைலாசருவுக்குச் செய்ததுபோல், என்னை உம்மிடம் ஆபிரகாமின் மடியிலே கொண்டுவந்துசேர்க்கப்பண்ணும். அங்கே நானுமக்கு அல்லெலூயா பாடி, சேனைகளுடைய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர்,பரிசுத்தர் என்று புகழ்ந்து போற்ற ஆவலாயிருக்கிறேன். இந்த என் ஆவல் நிறைவேறுமளவும் என்னைஉமது அடைக்கலத்தில் வைத்துப் பாதுகாத்து, எனக்கும் என்னுடையவர்களுக்கும் உமது பரிபூரணஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டருளும். இயேசுவின் நிமித்தம் என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி,

ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ37. வியாழன் காலை ஜெபம்தயவுள்ள பிதாவே, காலைப்ப−யாக என் ஸ்தோத்திரத்தை ஏற்றுக்கொள்ளத் தேவரீரைப்பிரார்த்திக்கிறேன். தேவரீர் சகல ஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்காய்க் குஞ்சுகளுக்கும்ஆகாரங்கொடுக்கிறவராய் இருக்கிறீர். நானும் உம்மையே நோக்கியிருக்கிறேன். உம்மை நோக்கியேகூப்பிடுகிறேன். எனக்கிரங்கி என்னை ஆசீர்வதியும். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்துபட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாதென்று உமது வசனம்சொல்லுகிறதே. இது சத்தியம் என்தை நானும் அறிந்திருக்கிறேன். இந்த விசுவாசத்திலே இன்றுதினத்தையும் துவக்குகிறேன், போக்குவேன், முடிப்பேன். பரமபிதாவே, எனக்கு எது குறைந்தாலும்உம்மைப் பிடித்துக் கொள்ளுகிற விசுவாசம் ஒருபோதும் குறையாமல், நாளொருவண்ணமாய் அதுஅதிகரித்து வளரும்படி கிருபை செய்யும். என் வறுமையில் முதலாய் நான் உமது பராமரிப்பைக் குறித்துகொஞ்சமும் சந்தேகப்படாமல், போதுமென்ற மனதோடு உமது திருக்கரத்தை முத்தி செய்யும் பிள்ளைப்பக்தியை அடியேனுக்குத் தந்தருளும். தேவரீர் சரீரத்துக்கும் ஜீவனுக்கும் வேண்டிய சகல நன்மைகளையும்எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் கிருபையாய்க் கட்டளையிடும். என் சகோதரராகிய ஏழைக்கிறிஸ்தவர்களுக்கு நீர் பரிதபித்து அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தளர்ந்து போகாதபடிக்கு அவர்களைகைதூக்கி ஆதரித்தருளும். இயேசுவின் திருமுகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ38. வியாழன் மாலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, இன்று தினத்திலும், கடந்த எல்லா நாட்களிலும் நான் பெற்றனுபவித்தஉமது பிதாவடைவான பராமரிப்புக்காக உமக்கு அனந்த துதியுண்டாவதாக. ஆண்டவரே, என்னைநன்றிகேட்டுக்கு விலக்கமாய்க் காரும். உம்மிடம் சகல நன்மைகளையும் அனுபவித்தபின் உம்மைவிட்டுமனம்விலகி உமக்கு துரோகம் செய்கிறவர்களின் கூட்டத்தில் நான் இராமல், உமக்கு எல்லாக் காலத்திலும்தோத்திரம் செலுத்துகிற பரிசுத்த கூட்டத்தில் நான் இருக்கும்படி உமது பரிசுத்தஆவியால் என்னைஆண்டு நடத்தியருளும். நான் வாக்கினால் மாத்திரமல்ல, பரிசுத்த நடக்கையாலும் என் நன்றியறிதலைக்காண்பித்து உம்மை மகிமைப்படுத்த எனக்கு ஒத்தாசை பண்ணும். என் நாவு ஓய்ந்தாலும் என் மனதுஓயாமல் உம்மை எந்நேரமும் துதிக்கும் பாக்கியத்தை அடியேனுக்குத் தந்தருளும். ஆண்டவரே,பொழுதுசாய்ந்த இந்த நேரத்தில் குருவிகள் தங்கள் கூட்டிலும், மிருகங்கள் தங்கள் தொழுவத்திலும்இளைப்பாறும். நானோ என் அருமை இரட்சகரின் ஐந்து காயத்தில் என் இளைப்பாற்றியைத் தேடுகிறேன்.இதை எனக்குக் கிருபையாய்க் கட்டளையிட்டு, எனக்கு நல்ல நித்திரையைத் தந்து, காலமே என்னைசுகத்தோடு எழுப்பியருளும். உமது திருப்பாதமே என் பாக்கியத்தலம், சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ-39. வெள்ளி காலை ஜெபம்ஒப்பற்ற நேசமுள்ள கர்த்தராகிய இயேசுவே, பராபரனுடைய ஏகசுதனே, தேவரீர் என்னைசிநேகித்த சிநேகத்தால், உமக்குப் பிதாவினிடத்தி−ருந்த சகல மகிமையையும் வெறுத்து, இந்தப்பூலோகத்துக்கு என் ரூபெடுத்துவரச் சித்தமானீரே, நீர் விசேஷமாய் என் பாவத்தைச் சுமந்து,தேவகோபத்துக்கும் சாபத்துக்கும் உம்மையுள்ளாக்கி சொல்−முடியாத பாடுகளுக்கும் சிலுவையின்மரணத்துக்கும் உம்மை உட்படுத்தினீர் என்பதை வெள்ளிக்கிழமையாகிய இன்று நினைத்து உம்மைமுழுமனதினாலும் தோத்தரிக்கிறேன். ஆண்டவரே, நான் உம்மால் பாவம் மரணம் பிசாசின் வல்லமைக்குநீங்கலானேன். என் இருதயத்தில் உமது ஆவியை ஊற்றி, உமது பரம பனியால் அதைச்செழிப்பாக்கியருளும். என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது ஐந்து காய அடைக்கலக்கோட்டையில்வைத்துப் பாதுகாரும். என்னை எல்லாப் பாவமும் நீங்கச் சுத்திகரியும். சகல நற்கிரியைக்கும், என்னைச்சமர்த்தனாக்கியருளும். இயேசுவே, என் உழைப்பிலும் களைப்பிலும் உமது திருப் பாடுகளே எனதுஆறுதலும், நம்பிக்கையும், ஜீவனும், பெலனுமாயிருக்கப் பண்ணும். தேவரீர் என்னை இந்த அழுகைப்பள்ளத்தாக்கில் வைத்திருக்குமளவும் என்னோடிருந்து என்னை ஆசீர்வதியும். என்னை நீர் அழைக்கச்சித்தமாகும்பொழுது, உமது நித்திய மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் என்னைப் பங்காளனாக்கியருளும்.பாவத்தைச் சுமந்த தெய்வஆட்டுக்குட்டியே, தேவரீர் அடியேன்பேரில் இரங்கி எனக்கு உமதுசமாதானத்தைக் கட்டளையிட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

40. வெள்ளி மாலை ஜெபம்மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசுநாதரே, எனக்காகப் பாடுபட்டு மரித்த தேவரீரை நினைக்காமல்நான் படுக்கக்கூடுவது எப்படி? பரிசுத்த சிலுவை மரத்திலே பாவிகளுக்காக வேண்டுதல் செய்தவரே, என்பாவங்களெல்லாவற்றையும் எனக்கு மன்னித்தருளும். வலதுபாகக் கள்ளனை நோக்கிப் பார்த்த கண்ணால்என்னையும் நோக்கிப் பார்த்து, எனக்கும் மோட்சப்பிரவேசம் கிடைக்கும் என்கிற திடநம்பிக்கையைத்தந்தருளும். இந்த நம்பிக்கையிலே நான் இன்றிரவையும், என் ஜீவகால முழுவதையும் பாக்கியமாய்க்கழிக்கத் துணைபுரியும். உமது சிலுவையண்டை நின்ற உமது தாய்க்கும் மற்றவர்களுக்கும்ஆறுதலளித்ததுபோல், இப்பொழுது எனக்கும் நல்லாறுதலைத் தந்து ஆசீர்வதியும். தேவரீர் எனக்காகஅனுபவித்த ஆத்தும வேதனையையும் சரீர வேதனையையும் எல்லா நேரத்திலும் நான் நினைத்துதியானிக்க உமது ஆவியானவர் என்னை ஏவியருள்வாராக. நீர் முற்றுமுடித்த இரட்சிப்பில் அடியேனும்பங்குபெற்று, கடைசியாய் நான் மரிக்கும்போது உம்மைப் போல்: பிதாவே, உமது கைகளில் என் ஆவியைஒப்புவிக்கிறேன் என்று சொல்−ப் பாக்கியமாய் மரிக்கவும் எனக்குக் கிருபை செய்தருளும். இந்தஇரவிலே தேவரீர் என்னை எவ்வித மோசத்துக்கும் விலக்கிக் காத்து, மறுநாளில் ஜீவனோடும் சுகத்தோடும்என்னை எழுந்திருக்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ41. சனி காலை ஜெபம்அன்பு மிகுந்த அருமை இரட்சகரே, உம்முடைய கிருபைக்கும் இரக்கத்துக்கும் அனந்தஸ்தோத்திரம். தேவரீர் என்னை எல்லாப் பாவங்களினின்றும் மீட்டிரட்சித்தீர் என்பதையறிந்து, நான் இன்றும்ஒவ்வொரு நாளிலும் பாவத்தைப் பகைத்து அதை மேற்கொண்டு, பரிசுத்தத்தில் நடந்து தேறப்பண்ணும்.தேவரீர் என்னை மரணத்துக்கு நீங்கலாக்கினீரே. ஆண்டவரே, நான் மரணத்துக்கஞ்சாமல், எப்போதும்அதற்கு சந்தோஷமாய்க் காத்திருக்கப் பண்ணும். நான் பசாசை எப்பொழுதும் உமது பலத்தால்மேற்கொண்டு, ஜெயமடைய எனக்குத் துணை நின்றருளும். கர்த்தாவே, உமது தெய்வீக ரத்தத்தால்கொள்ளப்பட்ட உமது ஆளாகிய நான் உம்மை விட்டு ஒருக்காலும் தப்பி ஓடிப் போகாமல் உம்மிடத்தில்முடிவுமட்டும் நிலைத்திருக்கும்படி என்னைக் காப்பாற்றியருளும். இந்தப் பகலை நான் உமக்கு மகிமையாகஉபயோகிக்கும்படி தேவரீர் எனக்கு ஒத்தாசை பண்ண வேண்டுமென்று உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.எனக்கும் என்னுடையவர்களுக்கும் என்ன தேவையென்பதை தேவரீர் அறிந்திருக்கிறீர். ஆகையால்என்னை முற்றிலும் உமக்கு ஒப்புவிக்கிறேன். என்னை உமது அற்புத கரத்தால் ஆதரித்து, உமதுநன்மைகளால் நிரப்பியருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ42. சனி மாலை ஜெபம்இயேசு சுவாமியே, அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாகிய உமது கிருபையால் நான்திரும்பவும் ஒரு வாரத்தை முடிக்கிறேன். நீர் என் கர்த்தரும், நான் உமது ஆளுமாயிருக்கையில் எனக்குஎன்ன குறைவுண்டு. நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். தேவரீர் என்னைக் கேட்கிறீர். நான்மன்றாடுகிறேன். நீர் கொடுக்கிறீர். நான் தவறிவிழுந்தால், தேவரீர் என்னைக் கைதூக்கி ஆதரிக்கிறீர்.இயேசுவே, சென்ற பக−லும் நான் வெகுவாய்த் தவறினேன் என்று மனஸ்தாபப்படுகிறேன். நான் செய்யவேண்டாததைச் செய்து, செய்யவேண்டியதைச் செய்யாமற் போனேன் என்று அறிக்கையிடுகிறேன்.எனக்காகப் பரிதபித்து என் குற்றத்தை மன்னித்தருளும். உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவும்.என்னைப் பாபமறச் சுத்திகரியும். வாரத்தின் கடைசி இரவாகிய இப்பொழுது என் கடைசி முடிவைநினைக்கிறேன். எனக்குப் பாக்கியமான முடிவைத் தந்தருளும். உம்மைப் பற்றும் விசுவாசத்தில்உறுதியாகவும், மெய்நம்பிக்கையில் திடமாகவும், மோட்ச வாஞ்சையால் பூரித்தவனாகவும் என் ஆவியைவிட்டுவிடும்படி, என் மூச்சொடுங்கும் அந்த நேரத்தில் தேவரீர் என் பக்கத்துணையாயிரும். என்னில்நற்கிரியையைத் துவக்கின பராபரனே, தேவரீர் அதை இயேசுக்கிறிஸ்துவின் நாள்மட்டாக முடியநடத்திவாரும். என்னையும் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பத்திரமாய் இளைப்பாறப்பண்ணி, உமதுதிருநாளைக் காணும்படி சுகத்தோடு எழுப்பிவிட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜநான்காம் வாரம்ஜஜஜஜஜஜஜஜஜஜ43. ஞாயிறு காலை ஜெபம்கர்த்தராகிய பராபரனே, தேவரீர் சென்ற இரவில் என்னைச் சகல மோசங்களுக்கும் மறைத்து, சகல

பொல்லாங்குகளுக்கும் தற்காத்திரட்சித்து இந்தத் திருநாளைக் காணச் செய்ததற்காக உம்மைஸ்தோத்தரிக்கிறேன். நான் இந்தப் பரிசுத்தநாளைச் சரியாய் ஆசரிக்கத் துணை செய்தருளும்.பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருந்தால்,எத்தனைக்கு அதிகமாகப் பரமபிதா தம்மைக் கேட்கிறவர்களுக்குப் பரிசுத்தஆவியைக் கொடுப்பாரென்றுஎங்கள் இரட்சகர் திருவுளம்பற்றின வாக்குத்தத்தத்தை இன்று என்னில் நிறைவேற்றியருளும். உமதுஆவியானவர் என்னையும், இன்று தெய்வாராதனை செய்யப்போகிற எல்லாக் கிறிஸ்தவர்களையும்,விசேஷமாய் உமது திருவசனத்தைப் பிரசங்கிக்கிறவர்களையும் பிரகாசிப்பித்து ஆண்டுகொள்வாராக.ஆண்டவரே, இன்று நான் உம்மை மனமும் வாக்கும் ஒத்துப் புகழவும், உமது வசனத்தைக் கவனமாக்ககேட்டுப் படிக்கவும், உம்மை நோக்கி மெய்விசுவாசத்தோடு ஜெபிக்கவும் இப்படியே இத்திருநாளின் சகலஆசீர்வாதங்களையும் பெற்றனுபவிக்கவும் கிருபை செய்தருளும். பாடுபட்டு, மரித்து உயிர்த்தெழுந்தஇயேசுவின் நிமித்தமே என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ44. ஞாயிறு மாலை ஜெபம்பரிசுத்தத் திரியேக பராபரனே, தேவரீர் இன்று எனக்குப் பாராட்டின சகல கிருபைக்காகவும்உம்மை வணங்கி ஸ்தோத்தரிக்கிறேன். பிதாவே, உமது திருக்கரம் என்னைப் பராமரித்து நடத்திற்று.குமாரனே, உமது இரட்சிப்பு என்னைத் திருப்தியாக்கிற்று. பரிசுத்தஆவியே, உமது தேற்றரவால் நான்ஆறுதல் அடைந்தேன். இப்பொழுதும் ஆண்டவரே, என்னோடு தங்கியருளும். அதேனென்றால் அந்திநேரமாகிப் பொழுது சாய்ந்து போயிற்று. தேவரீர் என் பேரில் கிருபை கூர்ந்து, என்னைப் பரிசுத்தமாக்கி,நான் மெய்விசுவாசியாய்ப் படுத்து நித்திரை செய்யத் துணைபுரியும். யார் என்னைக் கைவிட்டாலும் நீர்என்னைக் கைவிடாதேயும். நான் எதுக்குத் தூரமானாலும் உமது கிருபைக்குத் தூரமாகாதபடிக் காப்பாற்றும்.கர்த்தாவே, நான் இன்று கேட்ட உமது வசனம் என்னில் நிலைத்து வேரூன்றிக் கனிகொடுக்கப் பண்ணும்.சபையின் பெரியோர், சிறியோர், ஸ்திரீகள், புருஷர்கள், வ−யோர், எளியோர் அனைவரையும், என்னைஜெபம் செய்யக் கேட்டுக்கொண்ட என் சகோதரர் சிநேகிதர் யாவரையும் இரக்கமாய்க் கண்ணோக்கிப்பார்த்து, அவர்களுக்கு வேண்டிய சகல நன்மைகளையும் கிருபையாயக் கட்டளையிடும். இரவின் சகலமோசங்களுக்கும் என்னை விலக்கமாய்க் காத்து, உமக்கு சித்தமுண்டானால் சுகத்தோடு எழுந்திருக்கப்பண்ணும். உமக்கு இப்பொழுதும் எப்பொழுதும் மகிமையுண்டாவதாக, சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ45. திங்கள் காலை ஜெபம்அன்புள்ள கர்த்தரே, தயவுள்ள பிதாவே, தேவரீர் எனக்குச் செய்துவந்த உபகாரங்களையும் எனக்குஅளித்திருக்கிற நன்மைகளையும் யோசித்துப் பார்க்கையில் அவை சொல்−முடியாதவைகளாகஇருக்கின்றன. நான் உம்மை அறியாத புறமதஸ்தர்களின் மத்தியில் ஜீவனுள்ள பராபரனாகிய உம்மைஅறிந்த கிறிஸ்தவனாயிருக்க கிருபை அளித்ததற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆண்டவரே, தேவரீர்என்னை உமது திருச்சபையின் அவயமும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்துக்குப் பங்குள்ளவனுமாக்கினீர்.இந்தப் பெரிய சிலாக்கியத்தை நான் ஒருபோதும் இழந்துபோகாதிருக்கத்தக்கதாய் உமது கிருபையில்என்னை நிலைநிறுத்திக் காப்பாற்றும். நான் இம்மையில் போராடும் சபையின் அவயமாய்ப் பசாசோடுஎதிர்த்து நிற்கவும், மறுமையில் வெற்றிசிறந்த சபையில் ஜெயக் குருத்தோலாகளுடன் உம்மைஎன்றென்றைக்கும் மகிமைப்படுத்தவும் துணைபுரிந்தருளும். இன்று நான் செய்யப்போகிற வேலைகளைஆசீர்வதித்து, அவை உமது திருச்சித்தத்துக்குப் பொருந்தினபடியே நிறைவேறச் செய்தருளும். உமதுஒன்றான குமாரனாகிய இயேசுவின் நிமித்தமே எனக்கிரங்கியருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ46. திங்கள் மாலை ஜெபம்கர்த்தராகிய ஆண்டவரே, உமது கிருபையால் நான் இந்நாள் முழுவதும் யாதொரு சேதமுமின்றிபிழைத்திருக்கிறேன். உமக்கே மகிமை உண்டாவதாக. இந்த இரவிலும் தேவரீர்தாம் என் துணை, என்காவல், என் அடைக்கலம். இப்பொழுது நான் யாதொரு பயமும் இல்லாமல் இளைப்பாறத்தக்கதாய் தேவரீர்என் பாவங்களையெல்லாம் எனக்குக் கிருபையாய் மன்னித்தருளும். கர்த்தாவே, நான் பாவமன்னிப்புஉண்டென்று விசுவாசிக்கிறேன். என் பாவம் இரத்தாம்பரத்தைப்போல் சிகப்பாயிருந்தாலும், தேவரீர்அதைப் போக்கி என்னை உறைந்த மழையிலும் வெண்மையாக்க வல்லவரும் சித்தமுள்ளவருக இருக்கிறீர்.இதை நான் எக்காலத்திலும் பரிபூரணமாய் நம்பப்பண்ணும். இந்த நம்பிக்கையைவிட்டு என்னைப்பேர்க்கப்பார்க்கும் பிசாசின் சோதனையை நான் மேற்கொள்ள அடியேனுக்குப் பெலன் தாரும்.பராபரனுடைய குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் திருரத்தம் என்னை எல்லாப் பாவமும் நீங்கச்

சுத்திகரிக்கிறது என்கிற திவ்விய சத்தியம் என் ஊன்றுகோலாயிருக்கத் தயை புரியும். கர்த்தாவே, தேவரீர்என் பலவீனத்தில் பலமும், வியாதியில் ஒüஷதமும், எளிமையில் ஐசுவரியமுமாயிரும். இந்த இரவில்என்னையும் எல்லாக் கிறிஸ்தவர்களையும் விசேஷமாய் என் உபகாரிகளையும், சிநேகிதரையும், என்னைச்செபம் செய்யக் கேட்டுக்கொண்ட யாவரையும் உமது ஐக்கியத்தில் வைத்துப் பாதுகாத்தருளும். உமதுபாதமே கதி, சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ47. செவ்வாய் காலை ஜெபம்இயேசு ஐயரே, உமது திருநாமத்தை முன்னிட்டு இந்த நாளைத் துவக்குகிறேன். இந்நாள்முழுவதும் தேவரீர் என்னோடிருந்து என் போக்கையும் வரத்தையும், என் நினைவுகள், வார்த்தைகள்,கிரியைகளையும் உமக்கு உகந்ததாக்கியருளும். விசேஷமாய் என் விசுவாசத்தைப் பலப்படுத்தி, நான்சிநேகத்தில் பெருகத் துணை செய்யும். நான் பரதேசம் பண்ணும் சகல நாளிலும் நித்தியஜீவ நம்பிக்கையில்பெருகி, பரம பரதீசை எனக்கு இலக்காக வைத்துப் பிழைக்கக் கிருபை கூர்ந்தருளும். இந்த நாள் தேவரீர்எனக்குக் கொடுத்த கிருபையின் நாள் என்று நான் நன்றையறிந்து, இதில் என் இரட்சிப்பைப் பயத்தோடும்நடுக்கத்தோடும் நடப்பிக்கப்பண்ணும். சாத்தானின் கண்ணியிலும், லோகத்தின் மாயையிலும், மாமிசஇச்சைகளிலும் நான் சிக்கிக் கொள்ளாமல், என் காலடிகளை உமக்குகந்த நீதியின் பாதையிலேநடத்தியருள உம்மைத் தாழ்மையாய்க் கெஞ்சி மன்றாடுகிறேன். என் சீர் நிருவாகமெல்லாம் அறிந்திருக்கும்பிதாவே, தேவரீர் என் குறைவை நிறைவாக்கி, என் பலவீனத்தில் என்னைப் பலப்படுத்தி, என்வேலைகளை வாய்க்கப்பண்ணி, என்னையும் எனக்கடுத்த யாவரையும் பேர்பேராய் ஆசீர்வதித்தருளும்.உமது புண்ணியத்தினால் என் ஜெபம் உமக்கு ஏற்றிருப்பதாக சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ48. செவ்வாய் மாலை ஜெபம்மகா, கிருபையுள்ள பராபரனே, தேவரீர் என் பிதாவும் நான் உமது பிள்ளையுமாயிருக்கிறதற்காகக்களிகூர்ந்து, உம்மைத் துதித்துத் தோத்தரிக்கிறேன். நீர் ஒருவரே வானத்திலும் பூமியிலுமுள்ள சகோதரக்கூட்டமனைத்துக்கும் நாமகாரணராயிருக்கிறீர். நான் உமது அடிமைக்கு அடிமையாயிருந்தஅபாத்திரனாயிருந்தும், என் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நிமித்தம் தேவரீர் என்னை உமதுபிள்ளையாக்கிக் கொண்டீர். இந்த உமது சுத்தக் கிருபைக்கு நான் என்ன பதில் செலுத்தப் போகிறேன்.இன்று தேவரீர் என்னைப் பிதாவடைவாகக் கண்ணோக்கினீர். தாங்கி ஆதரித்தீர். தற்காத்து ரட்சித்தீர்.நானோ பிள்ளை பக்தியாக உம்மை முழுமனதாலும் சிநேகித்ததில்லை என்று மனஸ்தாபத்தோடுஅறிக்கையிடுகிறேன். கெட்டக் குமாரனை ஏற்றுக்கொண்ட தகப்பனைப் போல் என்னையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் பிதாவே. நாமே உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும், நருங்குண்ட பணிந்தஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறோம் என்று திருவுளம்பற்றின கர்த்தாவே, தேவரீர்அடியேனிடத்திலும் வாசம்பண்ணும். கல்லான இருதயத்தை என்னி−ருந்து எடுத்துப்போட்டுச் சதையானஇருதயத்தை எனக்குத் தாரும். தேவரீர் என்னை எவ்விதத் தீமைக்கும் விலக்கிக் காப்பாற்றும். ஆசீர்வாதக்கர்த்தராகிய உமது செட்டைக்குள் வந்தடைகிற இந்த ஏழையைத் தள்ளிவிடாதேயும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ49. புதன் காலை ஜெபம்பரமதகப்பனே, இரக்கமுள்ள பிதாவே, தேவரீர் ஏழை அடியேனுக்குப் பாராட்டின கிருபைக்காகஉம்மை முழுமனதினாலும் ஸ்தோத்தரிக்கிறேன். இந்தப் பக−லும் என்னைக் கண்ணோக்கிப் பாரும்.கர்த்தாவே, சேனைகளுடைய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று புகழ்ந்து போற்றப்படுகிறஉம்முடைய திருநாமம் என்னிடத்திலும் என்னாலும் பரிசுத்தமாகவேண்டும் என்பது என் வாஞ்சையும்தவனமுமாயிருக்கிறது. எல்லாக்காலத்திலும் உமது திருச்சபையில் உமது திருவசனம் உள்ளது உள்ளபடியேசுத்தமாய்ப் போதிக்கப்பட கிருபைசெய்யும். ஆண்டவரே, நானும் என்னுடையவர்களும் எந்தமுகாந்திரத்தை முன்னிட்டும் சத்தியத்தைவிட்டுப் பிசகிப்போகாமல், சுத்த போதகத்தில் மரணபரியந்தம்விசுவாசமாய் நிலைத்திருக்கப் பெலன் தந்தருளும். சத்தியத்துக்கு விரோதமாய்ப் போதிக்கிற கள்ளப்போதகருக்குத் தேவரீர் பரிதபித்து அவர்களைத் திருப்பியருளும். துர்ப்போதகத்தால் கெட்டுத்துர்நடக்கையாய் நடந்து, அஞ்ஞானிகளுக்குள் உமது நாமம் தூஷணிக்கப்படுவதற்குக் காரணராயிருக்கிறபொல்லாத கிறிஸ்தவர்களுக்கும் தேவரீர் இரங்கி அவர்களை மெய் விசுவாசத்துக்குக் கொண்டுவந்துசேர்த்தருளும். அடியேன் இந்தப் பக−ல் உமது வசனத்துக்கு ஒத்த நெருக்கமான வழியிலே நடந்து,உம்மை யாவிலும் மகிமைப்படுத்த எனக்கு ஒத்தாசை செய்தருள உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். தேவரீர்பரிசுத்தராயிருக்கிறதுபோல் நானும் பரிசுத்தனாகும்படி உமது பரிசுத்தஆவியால் என்னை நிரப்பிச்

சுத்திகரித்தருளும். சத்திய பராபரனே, உமது திருக்கரத்தில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும்ஏற்றுக்கொள்ளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ50. புதன் மாலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, அந்திப்ப−யாக நான் கொண்டுவருகிற என் ஸ்தோத்திரத்தைஏற்றுக்கொள்ளும். நான் எப்பொழுதும் உம்மை நோக்கி ஜெபம் செய்யவும், உமக்கே துதிசெலுத்தவுங்கூடும்படி தேவரீர் என்னை உமது ராஜ்ஜியத்தின் குடியாக்கின மட்டற்ற கிருபைக்காக உம்மைமகிமைப்படுத்துகிறேன். இன்னமும் உமது கிருபையை ஏற்றுக் கொள்ளாமலும், உமது ராஜ்ஜியத்துக்குஉள்ளாகாமலும் இருக்கிற ஏழை அக்கியானிகளுக்கு இரங்கி அவர்களை அந்தகார ராஜ்ஜித்தி−ருந்துதிருப்பி உமது திருக்குமாரனின் இராஜ்ஜியத்தில் கொண்டுவந்து சேர்த்தருளும். இதற்காகப்பிரயாசைப்படுகிற உமது ஊழியருக்கு நற்சுகத்தையும் பலத்தையும், விசேஷமாய் உமது ஆவியின்வரத்தையும் கட்டளையிட்டு அவர்கள் வேலைகளை ஆசீர்வதியும். உமது கிருபையின் ராஜ்ஜியத்திலேஇருக்கிற நானும் மற்றெல்லாக் கிறிஸ்தவர்களும் தெய்வபக்தியாய்ச் சீவனம் பண்ண உமதுபரிசுத்தஆவியால் பலப்படுத்தியருளும். நான் மரிக்கும்போது பரிசுத்தவான்களும் தேவதூதரும் இருக்கிறமகிமையின் ராச்சியத்தில் தப்பாமல் வந்துசேரக் கிருபை செய்யும்படி உம்மைப் பணிந்து வேண்டிக்கொள்ளுகிறேன். நீர் அங்கே என்னை சேர்க்குமளவும் நான் அதன்மேல் வாஞ்சையுள்ளவனாய்க்காத்திருக்க என்னைப் பரமசிந்தையால் நிரப்பியருளும். இந்தச் சிந்தையோடு நான் இந்த இரவிலும்நித்திரை செய்து, இதே சிந்தையோடு எழுந்திருக்க ஒத்தாசைபண்ணும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ51. வியாழன் காலை ஜெபம்அன்புள்ள பராபரனே, உமது பிதாவடைவான பாதுகாப்பில் நான் பத்திரமாய் இளைப்பாறினேன்.உமது கிருபையினால் சுகத்தோடு எழுந்திருக்கிறேன். இந்தப் பகல் முழுவதும் நான் உமதுதிருச்சித்தத்துக்குக் கீழமைந்து நடக்க விரும்புகிறேன். நான் யாவிலும் அதை நிறைவேற்றத் தேவரீர்துணைபுரியும். உமது சித்தம் ஒன்றே மகா நல்லதும், அது கிருபையுள்ளதுமாயிருக்கிறதென்பதை நான்இம்மட்டும் அறிந்திருப்பதுபோல் இன்றும் அறிந்துகொள்ளப்பண்ணும். எனக்கு வரும் பாடுகள்உபத்திரவங்கள் யாவிலும் நான் என் அருமை ரட்சகர் சொன்னதுபோல், எனக்கல்ல, உமக்கேசித்தமாயிருக்கிறபடி ஆவதாக என்று சொல்லக் கிருபை செய்தருளும். கர்த்தாவே, உமது பரிசுத்தசித்தத்தைச் சம்மனசுகள் நிறைவேற்றுவதுபோல், அடியேனும் உற்சாகமும் தீவிரமுமாய் இரவும் பகலும்நிறைவேற்ற உமது பரிசுத்தஆவியைக் கொண்டு என்னை நடத்தியருளும். நான் உமது பரிசுத்த சித்தத்தைநிறைவேற்றாதபடி பலவிதத்திலும் தடைசெய்கிற பசாசு உலகம் மாமிசம் என்ற பொல்லா சத்துருக்களின்துர்ச்சித்தம் என்னிடத்தில் நிறைவேறாதபடிக்குத் தேவரீர்தாமே என் காவலாளியாயிரும். நான் இன்றுசெய்யப்போகிற வேலைகளில் எது உமக்கு ஏற்காததோ அதைத் தேவரீர் தடுத்துப்போடும். எது உமக்குஏற்றதோ அதை ஆசீர்வதித்து, நான் இந்த நாளைச் சரியாய் முடிக்கத் துணை செய்தருளும் சுவாமி,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ52. வியாழன் மாலை ஜெபம்சர்வஜீவ தயாபரராகிய பராபரனே, எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கின்றன. தேவரீர் ஏற்றவேளையிலே அவைகளின் போசனத்தை அவைகளுக்குக் கொடுக்கிறீர்.உம்முடைய கையைத் திறந்து ஜீவனுள்ளதெல்லாவற்றையும் இரம்மியமாய்த் திருப்தியடையப் பண்ணுகிறீர்.இதை நான் இந்த நாளிலும் கண்டுணரத்தக்கதாய்த் தேவரீர் என் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும்தேவையானவற்றைக் கட்டளையிட்டுப் பராமரித்ததற்காக உம்மை முழுமனதினாலும் தோத்தரிக்கிறேன்.இன்னமும் எனக்குத் தேவையானவைகள் என்னவென்று தேவரீர் அறிவீர். அவைகளையும் எனக்குக்கிருபையாய்க் கட்டளையிட்டருளும். விசேஷமாய் ஏழைக் கிறிஸ்தவர்களுக்காக உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். தேவரீர் அவர்களுக்கு இரங்கி, அவர்கள் குறைவை நிறைவாக்கி, அவர்களை ஆற்றித்தேற்றிபலப்படுத்தியருளும். எனக்கு நன்மை செய்துவருகிற எல்லா உபகாரிகளையும் தேவரீர் ஆசீர்வதியும். என்கன்மலையாகிய கர்த்தாவே, பொழுதுசாய்ந்த இந்த நேரத்திலே அடியேன் என்னையும்,என்னுடையவர்களையும், எனக்கடுத்த யாவரையும் உமது திருக்கரத்தில் ஒப்புவித்து, உமது பாதாரவிந்தத்தில்படுத்துக்கொள்ளுகிறேன். நான் மெய்விசுவாசியாய் இளைப்பாறி நித்திரை செய்யவும், சுகத்தோடும்பத்தோடும் எழுந்து உம்மை மகிமைப்படுத்தவும் எனக்கு ஒத்தாசை செய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

53. வெள்ளி காலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, தேவரீர் மன்னிப்பில் பெருத்த தேவனென்று நான் அறிந்து உமக்குப்பயந்து, உம்மைத் தோத்தரிக்கிறேன். நான் ஜென்மத்தாலும் கெட்டவன், செய்கையாலும் பாதகன் என்பதைதேவரீர் அறிவீர். என் பாவங்களையெல்லாம் எனக்குக் கிருபையாய் மன்னியும். என் அருமை ரட்சகர் என்கடனைத் தீர்க்கும்படி பட்டனுபவித்த பாடுகளைப் பாரும். அவர் சிந்தின திரு இரத்தத்தையும், அவருடையபரிசுத்த மரணத்தையும் கண்ணோக்கும். தேவரீர் தினந்தோறும் என் பாவங்களைக் கிருபையாய்மன்னிக்கிறீர் என்பதை நான் நினைத்து, என் சகோதரருக்கு அவர்கள் குற்றங்களைமன்னிக்கிறவனாயிருக்கப்பண்ணும். நான் என் சத்துருக்களைச் சிநேகிக்கவும், சபிக்கிறவர்களைஆசீர்வதிக்கவும், பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யவும் கூடும்படிக்கு தேவரீர் என்னை ஆண்டுநடத்தியருளும். என் நீதியின் பராபரனே, நான் கூப்பிடுகையில் என்னைக் கேளும். தேவரீர்உம்முடையவர்களை அதிசயமாய் நடத்துகிறவர் என்பதை நான் இன்றும் அறிந்து உம்மைமகிமைப்படுத்தத் துணை செய்தருளும். உமது திருக்குமாரனினிமித்தம் என்மேல் இரங்கி, என்விண்ணப்பத்தைக் கேட்டு, என்னை ஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ54. வெள்ளி மாலை ஜெபம்இரக்கமுள்ள தகப்பனை, இன்று தேவரீர் அடியேனுக்குப் பாராட்டின எல்லாக் கிருபைக்காகவும்,உண்மைக்காகவும் உமக்குக் கனம் புகழ்ச்சி தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே, நான் பரிசுத்தத்தில்தேர்ச்சியடையத் துணைபுரியும். நான் பாம்புக்குப் பயந்து ஓடுவதுபோல் பாவத்துக்குப் பயந்து ஓடும்படிஉமக்கு பயப்படுகிற பயம் என்னை ஆள்வதாக். உமது திருக்கரம் என்னை மோட்சவழியிலே நடத்தக்கடவது. நான் உமது கற்பநைகளை மீறிப் பாவம் செய்வதற்கு என்னை சோதிக்கும் எல்லாசத்துருக்களையும். நான் திடமாய் எதிர்த்து மேற்கொள்ளும்படிக்கு எனக்குப் பெலன் தந்தருளும்.கர்த்தாவே, இது சோதனை மிகுந்த  பொல்லாத உலகம் என்பதைத் தேவரீர் அறிவீர். எனக்கு வரும் எல்லாசோதனைகளிலேயும் நான் என் இரட்சகர் செய்ததுபோல், உமது திருவசனத்தை எப்பொழுதும்விசுவாசமாய்க் கையாடவும், என் கண் தூங்கினாலும், இருதயம் விழித்திருந்து ஜெபம்பண்ணவும் தேவரீர்உமது பரிசுத்த ஆவியால் என்னை ஏவியருளும். ஆண்டவரே, நான் மெய்விசுவாசிகளுக்கு ஒத்தபடி என்படுக்கையில் என் இருதயத்தில் பேசி அமர்ந்திருக்கப்பண்ணும். அப்பொழுது நான் சமாதானத்திலேசயனித்துக்கொண்டும் நித்திரை பண்ணியும் இருப்பேன். ஏனெனில் கர்த்தாவே, தேவரீர் ஒருவரே என்னைசுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ55. சனி காலை ஜெபம்தயாபரராகிய கர்த்தாவே, உமது சொல்−முடியாத கிருபைக்காக உம்மை அதிகாலையில்தோத்தரித்து, உமது நாமத்தில் என் கைகளை ஏறெடுப்பேன். நான் இன்று காலையில் என் ஆத்துமம்சரீரம், வேலை சோ−கள், போக்குவரத்து, பொருள், கனம், யாவையும் எனக்குள்ளதனைத்தையும் உமக்குஒப்புவிக்கிறேன். ஆண்டவரே, எனக்கு வரக்கூடிய எல்லாத் தீமையினின்றும் தேவரீர் என்னைக்கிருபையாய் இரட்சித்துக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன். பரமபிதாவாகிய உமது திருச்சித்தமில்லாமல் என்தலையின் ஒரே மயிர் முதலாய் விழுவதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன். தகப்பனே, எனக்கு எந்தத்தீமை நேரிட்டாலும், அது உம்மைவிட்டு என்னைப் பிரிக்கிறதாயிராமல், உம்மைப் பற்றும்மெய்விசுவாசத்தில் என்நைப் பலப்படுத்துகிறதாயிருக்கப்பண்ணியருளும். கர்த்தாவே, என் விசுவாசத்தைவளர்ப்பியும். என்னை உமது சிநேகத்தில் வேரூன்றப்பண்ணும், மெய்நம்பிக்கையில் என்னைஉறுதிப்படுத்தும். நான் இந்த அழுகையின் பள்ளத்தாக்கில் தங்கியிருக்குமளவும் தேவரீர் என் ஆறுதலும்பலமுமாயிரும். அப்பொழுது நான் எந்தப் பொல்லாப்புக்கும் பயப்படேன். மரணத்துக்கும் அஞ்சேன்.கர்த்தாவே, நான் உமக்கென்று பிழைக்கவும் உமக்கென்று மரிக்கவும் எனக்குத் துணை புரிந்தருளும்சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ56. சனி மாலை ஜெபம்பிதா, குமாரன், பரிசுத்தஆவியாகிய திரியேக பராபரனே, உமது மட்டில்லாத இரக்கம் என்னைஇம்மட்டும் கொண்டுவந்ததென்று அறிக்கையிட்டு உமக்கு அத்தியந்து பணிவோடு தோத்திரம்செலுத்துகிறேன். தேவரீர் இன்று பக−ல் என்னை ஆதரித்ததுபோல் இந்த இரவிலும் என்னைஆதரித்தருளும். தேவரீர் எனக்குத் துணையாயிருக்கிறதினால் உம்முடைய செட்டைகளின் நிழ−லே

கெம்பீரிப்பாயிருக்கிறேன். கர்த்தாவே, நான் படுத்தாலும், எழுந்தாலும், நித்திரை செய்தாலும்,விழித்திருந்தாலும் உம்மை ஒருபோதும் மறவாமல் எக்காலத்திலும், உம்மோடுசஞ்சரிக்கிறவனாயிருக்கப்பண்ணும். நான் எக்காலத்திலும் உமது இராச்சியத்தின் குடியாயிருந்து அதன்நன்மைகளை அனுபவிக்கவும், உமது வல்லமையை நம்பும் நம்பிக்கையிலே பெருகவும், உமதுமகிமையையே என் இலக்காக வைத்துப் பிழைக்கவும் ஒத்தாசை பண்ணும். என் கவலைகளையும்,விசாரங்களையும் உமதுபேரில் எறிந்து போட்டுப் படுத்துக் கொள்ளுகிறேன். எனக்குநல்−ளைப்பாற்றியையும், சுகமான நித்திரையையும் கட்டளையிட்டருளும். சேனைகளின் பராபரனாகியகர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் பராபரனே செவிகொடும். என் கேடயமாகியபராபரனே, கண்ணோக்கமாயிரும். நீர் அபிஷேகம் பண்ணினவரின் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக்கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஐந்தாம் வாரம்ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ57. ஞாயிறு காலை ஜெபம்கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீருடைய கிருபைகள் பெரியவைகள் என்பதை நான் உண்மையாய்அறிக்கையிட்டு உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். உம்மை அடிக்கடி நான் மறந்தும், தேவரீர் என்னைக்கைவிடாமல் கடந்த இரவிலும், சென்றவாரம் முழுமையிலும் சுகபத்திரமாய்க் காப்பாற்றினீர். உம்முடையதிருநாளைக் காணவும் எனக்குச் சமயங்கொடுத்தீர். இந்நாளில் நான் உமது வசனத்தைக் கேட்டுப்படிக்கவும்,உமது ஐக்கியத்திலே இந்நாளைக் கழிக்கவும் என்னை ஏவி எழுப்பியருளும். உமது வசனத்தைப்பிரசங்கிக்கும் உமது ஊழியர்களை உமது வல்லமையுள்ள சாட்சிகளாக்கியருளும். உமது வசனத்தின்திருச்சபையை ஆசீர்வதிக்கவும், நான் இன்று கேட்டுப் படிப்பவைகளால் உமது வழிகளில் நிலைப்படவும்கிருபை செய்தருளும். இந்நாளில் உமது திருக்கற்பனைகளுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ய சோதிக்கும்பிசாசையும், அதன் தோழரையும் நான் ஜெயித்து, சமாதானமும் சந்தோஷமுமாய் இந்நாளை முடிக்கச்செய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ58. ஞாயிறு மாலை ஜெபம்கர்த்தாவே, உமது கிருபையால் நான் இந்த நாளை முடிக்கிறேன். கடந்த பக−ல் நான் கேட்டுப்படித்தவற்றை மறவாமல் அவைகளின்படி நடப்பதற்கான மனதையும், பலத்தையும் அடியேனுக்குத்தந்தருளும். தேவரீர் என் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பிய உமது வசனத்தின் பலத்தை என் நடக்கையால்நான் ரூபிக்க உமது ஆவியை அதிகமதிகமாக எனக்கு அருளும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.உமது வசனத்தை அசட்டை பண்ணுகிறவர்களைத் தேவரீர் கண்ணோக்கிப் பார்த்து, அவர்களைகுணப்படுத்தியருளும். உமது வசனத்தை சிநேகிக்கும் சிநேகத்தை எனக்குள்ளும் என்நைச் சேர்ந்தஎல்லாருக்குள்ளும் அதிகமதிகமாய் உண்டாக்கியருளும். உம்முடைய பரிசுத்தநாளை நான்எவ்விதத்திலாவது வீணாக்கியிருந்தால், தேவரீர் என் அருமை இரட்சகர் நிமித்தம் எனக்குக் கிருபையாய்மன்னியும். இந்த இரவிலே தேவரீர் என்னோடும், போதகமார் சபையார் யாவரோடும் இருந்து, யாவரையும்உமது செட்டைகளின் நிழ−லே திடங்கொண்டு தங்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ59. திங்கள் காலை ஜெபம்பரமதகப்பனே, உமது பெரிய இரக்கத்துக்காகவும், தயவுக்காகவும் நான் உம்மை வணங்கிஸ்தோத்தரிக்கிறேன். தேவரீர் கடந்த இரவிலே எனக்கு வரக்கூடிய சகல பொல்லாப்புகளுக்கும் அடியேனைவிலக்கியருளினீர். கர்த்தாவே, நன்றியறிதலுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். தேவரீரை நான்என்னுடைய வேலை சோ−களிலும் சம்பாஷணைகளிலும் மறக்கவொட்டாதேயும். நான் இன்று செய்யும்யாவையும் தேவரீருடைய பலத்தால் செய்யவும், தேவரீருடைய மகிமைக்கென்று செய்யவும் உமதுஆவியினால் என்னை ஆண்டு நடத்தியருளும். நான் என் வாக்கினாலும் நடக்கையினாலும் என்னைச்சுற்றிலுமுள்ள புறமதஸ்தருக்குமுன் உமக்குச் சாட்சிகொடுக்கத் தகுந்தவனாக்கியருளும். உமதுமகிமைக்கென்றும், பிறத்தியாரின் நன்மைக்கென்றும் இந்நாளை உபயோகிக்க என்னை உமது ஆவியால்நடத்தி எனக்குத் துணைநின்றருளும். இந்த என் ஏழை மன்றாட்டை இயேசு ரட்சகர் நிமித்தம்கேட்டருளும், சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

60. திங்கள் மாலை ஜெபம்அன்புள்ள இயேசுவே, உமது திருநாமத்திலே இந்நாளைத் துவக்கினேன்; உமது நாமத்திலேயேஅதை முடிக்கிறேன். நான் இந்த நாளில் என் வேலையில் காண்பித்த அஜாக்கிரதையையும்சுறுசுறுப்பில்லாமையையும் கிருபையாய் மன்னித்தருளும். என்னைப் பாரப்படுத்தும் கவலைகள்,விசாரங்கள் எவ்வளவு என்பதைத் தேவரீர் ஒருவரே அறிவீர். என் உள்ளத்தின் விசாரங்கள்பெருகுகையில் தேவரீருடைய வசனம் என்னைத் தேற்றரவு பண்ணாவிட்டால், நான் அழிந்தே போவேன்.ஆண்டவரே, எனக்காகப் பரிதபியும். தேவரீர் எனக்காக விசாரிப்பாயிருக்கிறீர் என்ற நிச்சயத்தை எனக்குத்தாரும். என் ஆத்தும இரட்சிப்பைத் தடைப்படுத்தும் உலகக்கவலைக்கு என்னை நீங்கலாக்கியருளும். உமதுஜனத்தின் கூப்பாட்டைக் கேட்கிற ஆண்டவரே, எனக்குச் சகாயம் செய்யத் தீவிரியும். தேவரீருடையபிதாவடைவான பராமரிப்பை நான் நம்பி, இந்த இரவிலே என்னையும், எனக்கடுத்தவர்களையும், என்னைஜெபம் செய்யக் கேட்டுக்கொண்ட யாவரையும் உமது திருக்காப்புக்கு ஒப்படைக்கிறேன். உமது சித்தம் என்பாக்கியம் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ61. செவ்வாய் காலை ஜெபம்வல்லமையுள்ள ஆண்டவரே, பரமபிதாவே, தேவரீருடைய திருச்சந்நிதிக்கு முன்பாகஸ்தோத்தரிப்போடும் புகழ்ச்சியோடும் வந்து நிற்கிறேன். என் பாவங்களைப் பாராமல் என் ஏழைஸ்தோத்திரத்தை ஏற்றுக்கொள்ளும். என்னுடைய சித்தத்தை உமது சித்தத்துக்குக் கீழாக்கும். உமதுவசனத்தை எப்போதும் என் நடக்கைக்குப் பிரமாணமாக்கும் புது இருதயத்தை எனக்குக் கொடுத்தருளும்.நான் கேடுபாடுள்ள என் பழைய வழிகளை முற்றிலும் விட்டு, என் வயது ஆகஆக, உமது குமாரனைஅறிகிற அறிவிலும் உமது வசனத்தை வாஞ்சிக்கும் வாஞ்சையிலும் அதிகரிக்க எனக்குச் சகாயம்செய்தருளும். உமது வழிகளில் என் கால்கள் நிலைவரப்பட இன்று உமது பரிசுத்த தூதரின் காவலைஎனக்குக் கட்டளையிடும். நான் மறுமையிலே உமது பரிசுத்த சமுகத்தை முகமுகமாய்த் தரிசிக்குமட்டும்உமது கிருபையை என்பேரில் பெரிதாக்கி, உமது பாதையிலே என்னை நடத்தியருளும். தேவரீர் என்ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது பாதுகாப்பில் ஏற்றுக்கொண்டு என்னை ஆசீர்வதித்தருளும் சுவாமி,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ62. செவ்வாய் மாலை ஜெபம்கர்த்தராகிய இயேசுவே, இந்த அந்திநேரத்திலே என் வீட்டுக்குள் வாரும். பாவியைன சகேயுவின்வீட்டை ஆசீர்வதித்தவரே, பாவியாகிய என் வீட்டையும் தேவரீர் ஆசீர்வதியும். என்நைச் சூழ்ந்திருக்கும்யாவருக்கும் என் வீடு முன்மாதிரியான கிறிஸ்தவ வீடாய் விளங்கக்கூடும்படி எனக்கும் என் வீட்டார்யாவருக்கும் உமது பரிசுத்தஆவியைத் தந்தருளும். தேவரீர், உமது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்துநடந்ததுபோல், நானும் எனக்கு மேலாகத் தேவரீர் வைத்தவர்களுக்கு அடங்கியிருக்கும் மனத்தாழ்மையைஎனக்குத் தந்தருளும். உமது பரிசுத்த சித்தத்துக்கு எதிர்த்து நிற்கும் பெருமையைத் தேவரீர் என்னையும்என் வீட்டார் யாவரையும் விட்டு அகற்றியருளும். உமது கிருபைக்கு என்னைப் புறம்பாக்கும் சாபத்தீடானயாவையும் என் வீட்டினின்று விலகிப்போகப் பண்ணும். நானும் என் குடும்பத்தார் யாவரும் உமக்குஉண்மையான ஊழியராக நடக்கவும், கடைசியிலே நிர்ப்பந்தம் நிறைந்த இவ்வுலகத்தைவிட்டு உமதுபரிசுத்த பட்டணத்துக்குள் சந்தோஷமாய்ப் பிரவேசிக்கவும் கிருபை செய்தருளும். இந்த இரவில் தேவரீர்என் காவலாளியாயிருந்து, எனக்கு நல்ல நித்திரையைத் தந்து, என்னைச் சுகத்தோடும் ஜீவனோடும்மறுகாலையில் எழுப்பியருள உம்மை மன்றாடிக் கேட்கிறேன், சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ63. புதன் காலை ஜெபம்என் பராபரனே, உமது கிருபையுள்ள காவலைக் கடந்த இரவில் அபாத்திரனாகிய எனக்குக்கட்டளையிட்டீர். உமது பெரிய அன்புக்கு ஸ்தோத்திரம். நான் இந்நாள் முழுவதும் உமது வெளிச்சத்தில்நடக்க என் புத்தியையும் மனதையும் உமது பரிசுத்தஆவியினால் பிரகாசிப்பித்தருளும். குருட்டாட்டமானஎண்ணங்களுக்கும் சகல அவபக்திக்கும் என்னை விலக்கிக் காத்தருளும். உமது வசனத்தின் வழியைவிட்டுவிலகிப்போகப்பண்ணும் சகல சோதனைகளையும் நான் மேற்கொள்ள எனக்குப் பலந்தாரும். பூரணசற்குணராகிய உமது திருச்சாயலை நான் தரித்து நடக்க எனக்கு ஒத்தாசை பண்ணும். என்னையும் என்வீட்டாரையும் மாத்திரம் சிநேகிக்கும் தற்சிநேகத்துக்கு என்னை விலக்கிக் காத்தருளும். எல்லாரையும்சிநேகிக்கும் கருத்தான சிநேகத்தை என்னில் ஊற்றியருளும். தேவரீர் என்னைச் சிநேகித்துவரும் உமதுசிநேகத்துக்கு நான் பாத்திரமாக நடந்து, உமக்கு மகிமையாக இந்நாளை முடிக்கத் துணைசெய்தருளும்,

சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ64. புதன் மாலை ஜெபம்பரமதகப்பனே, அந்திநேரமாகிய இப்பொழுது நான் உமக்கு ஸ்தோத்திரப−களைச் செலுத்த உமதுகிருபையின் ஆசனத்துக்கு முன்பாக வருகிறேன். இந்நாளில் நான் உமக்கு விரோதமாகச் செய்த சகலபாவங்களையும் மன்னித்து, என் ஸ்தோத்திரப−யைக் கிருபையாய் ஏற்றுக்கொள்ளும். தேவரீர் எனக்குச்செய்திருக்கும் உபகாரங்களுக்குத் தகுந்தவண்ணமாய் உம்மை ஸ்தோத்தரிக்க நான் கூடாதவன் என்பதைநீர் அறிவீர். என்றாலும் ஆண்டவரே, என் வாயின் வார்த்தைகளையும், என் நடக்கையையும் உமக்குஸ்தோத்திரமாக தேவரீர் மாற்ற வல்லவர். அடிக்கடி நான் என் இருதயத்தின் யோசனையினாலும், என்பேச்சினாலும், நடக்கையினாலும் உம்மை விசனப்படுத்தினேன். என் இருதயத்தைத் திருப்பும். அதைஉம்முடையதாக்கும். என் வாயி−ருந்து புறப்பட்ட தூஷண வார்த்தைகளும் சாபனைகளும் உமக்குத்தெரியாததல்ல. இவைகளையெல்லாம் தேவரீர் எனக்கு மன்னித்து என் இருதயத்தை சுத்திகரியும். உமதுபரிசுத்தஆவியை எனக்குத் தாரும். நான் உமது நேசகுமாரனைக் குறித்துப் பிறருக்குச் சொல்லக்கூடும்படிஎன்னை இரட்சிப்பின் சந்தோத்தால் நிரப்பியருளும். என்னுடைய சகல கவலைகளையும் உமதுதிருப்பாதத்தில் எறிந்துவிட்டுப் படுத்துக்கொள்ளுகிறேன். எனக்கும் என் வீட்டார் சிநேகிதருக்கும் இந்தஇரவில் நல்இளைப்பாறுதலைக் கட்டளையிட்டு, எல்லாரையும் மறுநாள் காலையில் ஜீவனோடும்சுகத்தோடும் எழுப்பி உம்மைத் துதிக்கப்பண்ணியருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ65. வியாழன் காலை ஜெபம்என் ஆண்டவரே, உமது கிருபையை நம்பி நான் இந்த நாளைத் துவக்க, தேவரீருடையஆசீர்வாதத்துக்காகக் காத்திருக்கிறேன். என்னை ஆசீர்வதியும். உமது ஆசீர்வாதத்தின் பலத்தால் மாத்திரம்நான் என் வேலையைச் செய்யக்கூடும். உமது ஆசீர்வாதமில்லாமல் நான் என்ன செய்தாலும்வீணாயிருக்கும். ஆதலால் உமது ஆசீர்வாதம் என் குடும்பத்தார் யாவர்பேரிலும் வந்து தங்குவதாக.இன்றைக்கு நான் என் வரத்தையும், பலத்தையும் உமக்கு மகிமையும் என்னைச் சுற்றிலுமுள்ளவர்களுக்குப்பிரயோசனமுமாகக் கையாட எனக்குத் துணையாயிரும். உமது நாமத்தை அறிக்கை பண்ணுவதில் நான்அஞ்சாதவனாய் விளங்க என்னைப் பலப்படுத்தும். என்னையும் என் வீட்டையும் நான் பார்க்கையில்உமது ஆசீர்வாதம் இல்லாததுபோல் பல சமயங்களில் காணுகிறது. உமது கரம் மெய்யாகவே எங்களைஆசீர்வதிக்கிறது என்கிற நிச்சயத்தை எனக்குத் தாரும். உமது ஆசீர்வாதத்துக்கு என்னையும் என்வீட்டையும் தூரமாக்கும் இருதயத்தின் சீர்கேட்டை எடுத்துப்போடும். உமது பரம பனியினால் அதைச்செழிப்பாக்கும். என் உட்படுதலையும், புறப்படுதலையும் தேவரீர் ஆசீர்வதித்து நான் என் ஆத்துமத்திலும்சரீரத்திலும் உமது நன்மைகளை ருசித்தவனாய் இந்நாளை முடிக்க எனக்குக் கிருபை செய்தருளும் சுவாமி,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ66. வியாழன் மாலை ஜெபம்சகல நன்மைகளுக்கும் ஊற்றாகிய பராபரனே, தேவரீர் இந்நாளிலும் சகல நாட்களிலும் எனக்கும்என் வீட்டாருக்கும் செய்துவந்த நன்மைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். இன்று நான் உமது மகிமைக்குக்குறைவாகச் செய்திருக்கும் சகல பாவங்களையும் மன்னித்தருளும். என் இருதயத்தில்சமாதானமடைந்தவனாய் என் படுக்கைக்குப் போகும்படி எனக்குக் கிருபை செய்தருளும். என் தரித்திரம்,வியாதி முத−ய சரீரக்கவலைகள் என் சமாதானத்தைக் குலைத்துப் போடுவதைத் தேவரீர் அறிவீர். என்பலவீனத்துக்காகப் பரிதபியும். எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தால் என் இருதயத்தைநிரப்பியருளும். அப்பொழுது நான் என்ன வந்தாலும் கலங்க மாட்டேன். என் வீட்டிலே மெய்யானசமாதானத்தைத் தாரும். என் வீட்டார் யாவரும் சமாதானப்பிரபுவாகிய இரட்சகரின் பிள்ளைகளாய்விளங்கும்படி உமது ஆவியை எங்கள் உள்ளத்தில் அனுப்பும். உலகக்காரியங்களாலும் பிசாசின்தந்திரத்தாலும் என் வீட்டின் சமாதானம் குலைந்து போகாதபடி என்னைப் பாதுகாத்தருளும். நானும்,என்னுடையவர்களும் ஒருவரையொருவர் பகைக்காமல், பிசாசையும் பாவத்தையும் மாத்திரம் பகைக்கவும்,உம்மையும் உமக்குள்ளே மற்றவர்களையும் சிநேகிக்கவும் ஒத்தாசை செய்தருளும். நான் அமைதலாய்நித்திரை செய்து உமது ஆவியினால் பலமடைந்தவனாய்க் காலையில் எழுந்திருக்கச் சகாயம்செய்தருளும். உமது திருக்குமாரன் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

67. வெள்ளி காலை ஜெபம்எனக்காகப் பாடுபட்ட இயேசு சுவாமி, உமது திருச்சிலுவையினடியிலே வந்து நிற்கிறேன். என்பாவத்தினாலேதான் உமக்கு இந்தப் பாடுகள் வந்தன; என்னை மீட்கத் தேவரீர் இவ்வளவு அகோரவேதனைக்குள்ளானீரே. உமக்கு என்ன ஈடு செலுலிóதுவேன். ஆண்டவரே, உமது பாடுகளுக்குக்காரணமான சகல பாவத்தையும் பகைக்கவும், உமக்கு நன்றியறிந்தவனாய்ப் பிழைக்கவும் என்னில் உமதுநேசத்தை ஊற்றியருளும். உமது நேசத்தால் எனக்குப் பாவம் யாவும் கசக்கவும், உமது திருப்பாடுகளின்தியானத்தால் நான் எனக்குள் என் சகலத்தையும் என் ஜீவனையும் கூட உமக்கென்று இழந்துபோகஆயத்தமுள்ளவனாகவும் என்னைத் திருப்பியருளும். உமது சிலுவையின் மகத்துவத்தைஅறியாதிருப்பவர்களுக்கு அதை உமது சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தும். உமது சிலுவையின்சுவிசேஷத்துக்கு எதிர்த்து நிற்கும் சகல எதிரிகளின் துர்ஆலோசனையையும் அவத்தமாக்கியருளும்.நானும் என் வீட்டாரெல்லாரும் தேவரீர் அனுப்பும் சிலுவையை முறுமுறுக்காமல் சந்தோஷத்தோடுஏற்றுக்கொள்ளும் பொறுமையைத் தாரும். இந்நாள் முழுவதும் தேவரீர் என்னையும் என் வீட்டார்சிநேகிதர் உபகாரிகள் யாவரையும் உமது ஐக்கியத்திலே வைத்துப் பாதுகாத்தருளும். உமது சிலுவையின்மரணத்தினிமித்தமே என் ஜெபத்தைக் கேட்டருளும். சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ68. வெள்ளி மாலை ஜெபம்கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே, எங்களுக்காக ப−யான தேவஆட்டுக்குட்டியே, எங்கள்மே−ரங்கும். தேவகோபத்துக்குப் பாத்திரனாகிய எனக்காகப் பிணைபட்டீரே; என்னை முழுவதும் உமக்குக்கையளிக்கிறேன். தேவரீர் பிதாவின் சித்தத்துக்கு அடங்கினதுபோல் என் சித்தமல்ல, உமது சித்தமேஎன்னில் நிறைவேறவும், என் வழிகள் அல்ல, உமது வழிகள் என்னில் ஆயத்தமாகவும் உமக்கென்னைமுழுவதும் ஒப்புவிக்கிறேன். என்னை என்னுடைய சகல பாவங்களுக்கும் அக்கிரமங்களுக்கும்நீங்கலாக்கியருளும். தேவரீர் உம்மைத் துன்பப்படுத்தின சத்துருக்களுக்காகச் செபம் செய்தீரே. உம்மைப்பாடுபடுத்தின பாதகனாகிய எனக்காகவும் தேவரீர் பிதாவின் வலதுபாகத்தில் வேண்டுதல் செய்கிறீர்.ஆண்டவரே, பிறரிடத்தில் பழிவாங்கும் சுபாவத்தை என்னைவிட்டு முழுவதும் விலக்கியருளும்.யாவருக்கும் மன்னிக்கும் சிந்தையையும் நன்மை செய்யும் குணத்தையும் எனக்குத் தாரும். இந்த இரவிலேசாத்தானாவது வேறெந்த பொல்லாப்புமாவது என்னையும் எனக்கடுத்த யாவரையும் அணுக ஒட்டாமல்பாதுகாத்தருளும். உமது ஐந்து காயங்களினிமித்தம் என் ஜெபத்தைக் கேட்டருளும். சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ69. சனி காலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, தேவரீர் கடந்த இரவில் என்னைச் சகல பொல்லாப்புக்கும் விலக்கி,இந்நாளைக் காணச் செய்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்நாளிலே நான் உமது பிள்ளையாய் நடக்கஎனக்கு உமது ஆவியின் ஒத்தாசையைத் தாரும். உமது திருக்குமாரனின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நான்உமக்குப் பிரியமாய் நடக்க என்னைப் பலப்படுத்தும். உமது நாமத்துக்கு அவமானமாகவும் உமதுதிருச்சபைக்கு இடறலாகவும் நடக்கும் மோசத்துக்கு என்னையும் சகல கிறிஸ்தவர்களையும் தூரமாக்கும்.உமது திருச்சபையிலுள்ள யாவரையும் உமது பரம சுதந்தரவாளிகளாக்கும். நான் மோட்சத்திலுள்ள நித்தியவாழ்வையே பெரிதாக மதித்து, உலக வாழ்வை அற்பமாக எண்ண என்னைப் பரமசிந்தையுள்ளவனாக்கும். லோகத்தை சிநேகித்து உமது சிநேகத்தை இழந்து போகும் மோசம் எனக்குண்டுஎன்பதைத் தேவரீர் அறிவீர். என்னையும் என் வீட்டாரையும் எங்களை அழைத்த பரிசுத்தரின்சாயலாக்கியருளும். இத்தேசத்தார் யாவரையும் உமது பிள்ளைகளாக்கியருளும். பிள்ளைக்கொத்தவிசுவாசத்தையும், நம்பிக்கையையும் என்னில் அதிகரிக்கச் செய்தருளும்; தேவரீர் எனக்குக் கிருபையாய்க்கொடுத்தருளிய நாளையும் நேரத்தையும் நான் உமக்குப் பொருந்தியபடி செலவிட அனுக்கிரகம்செய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ70. சனி மாலை ஜெபம்மட்டில்லாத தயவுள்ள பராபரனே, கடந்த பக−லும், சென்ற வாரம் முழுமையிலும் தேவரீர்எனக்குச் செய்து வந்திருக்கும் உபகாரம் மிகுதி. உமது உபகாரங்களில் எதுக்கும் நான் பாத்திரனல்ல. கடந்தவாரத்தில் நான் செய்திருக்கும் வேலையைப் பார்த்தால், என் கடமையை நான் உண்மையாய்ச்செய்யவில்லை என்று அறிக்கையிட வேண்டியவனாயிருக்கிறேன். உமது மகிமையைப் பார்க்கிலும் என்மகிமையை நாடும் சோதனை எனக்கு வந்தது என்பதையும் தேவரீர் அறிவீர். உள்ளிந்திரியங்களைஎல்லாம் அறிந்த ஆண்டவரே, என் பாவங்களுக்குத் தக்கபடி எனக்குச் செய்யாமலும், என்

அக்கிரமங்களுக்குத் தக்கதாக எனக்குச் சரிக்கட்டாமலும் இரும். நான் நல்ல மனச்சாட்சியுள்ளவனாய்இவ்வாரத்தை முடிக்கும்படி தேவரீர் என் பாவங்களையெல்லாம் மன்னியும். நான் புதிய வாரத்தில்பிரவேசிப்பேனா என்று அறியேன்; ஆதலால் இப்பொழுதே என்னையும் என் வீட்டாரையும் முடிவுக்குநல்லாயத்தப்படுத்தியருளும். உம்மைச் சந்திக்க எப்போதும் ஆயத்தமானத் தாரும். உமது வருகைக்குக்கொஞ்சமேனும் கவலைப்படாத கிறிஸ்தவர்களை நிர்விசாரத்தினின்று எழுப்பியருளும். நாளைக்கு உமதுசபைக்கு வசனத்தைக்கூற ஆயத்தம் செய்யும் போதகருக்கு உமது ஆவியை அளித்துப்பலப்படுத்தியருளும். உமது வசனத்தைக் கேட்கச் சகல இருதயங்களையும் ஆயத்தமாக்கியருளும்.இன்பமாய் இளைப்பாறி ஜீவனோடும் சுகத்தோடும் எழுந்து, உமது திருநாளைக் காணக் கிருபைசெய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

குடும்ப விசேஷங்களில் வாசிக்கத்தக்கஞான சங்கீதங்கள்விவாகம்: 128ஞானஸ்நானம்: 127இக்கட்டுக்காலம்: 77கொள்ளை நோய்: 91பிரயாணம்: 121துக்கம்: 90குடும்ப விசேஷஜெபங்கள்ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ86. க−யாணம்பரிசுத்த சமுசார மார்க்கத்தை ஏற்படுத்தின பராபரனே, உமது திருநாமத்தை முன்னிட்டுத்திருச்சமுசார மார்க்கத்தில் பிரவேசித்த இந்த உமது பிள்ளைகளைக் கிருபையாய்க் கண்ணோக்கிஆசீர்வதியும். அவர்களைத் தேவரீர் இம்மட்டும் தாங்கி ஆதரித்தீர். அவர்கள் பிரவேசித்த இந்தச் சமுசாரமார்க்கத்திலும் தேவரீர்தாமே அவர்கள் ஆதரவாயிரும். அவர்களை உமக்கு மகிமையும் திருச்சபைக்குஅலங்காரமுமாயிருக்கப்பண்ணும். தேவரீர்தாமே அவர்கள் வீட்டைப் பலமாகக் கட்டி, அவர்களுக்குநற்சுகத்தையும், பலத்தையும், தீர்க்காயுசையும், புத்திரசந்தானத்தையும், சமுசார மார்க்கத்துக்குத் தேவரீர்வாக்குத்தத்தம் பண்ணின சகல பாக்கியத்தையும் பரிபூரணமாய்க் கட்டளையிடும். அவர்களைவிசேஷமாய் மெய்விசுவாசத்திலும் அனலான சிநேகத்திலும் காப்பாற்றி, அவர்கள் மோட்சசுதந்தரவாளிகளாகும்படி கிருபை செய்தருளும். கானாவூர் க−யாணத்தை ஆசீர்வதித்த அருமை ரட்சகரைமுன்னிட்டு இந்த ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ87. குழந்தை ஞானஸ்நானம்பிதா, குமாரனே, பரிசுத்தஆவியாகிய திரியேக பராபரனே, தேவரீர் இந்த ஏழைப்பிள்ளையைபரிசுத்த ஞானஸ்நானத்தின் வழியாய் உமது பிள்ளையாக ஏற்றுக் கொண்ட உமது சொல்லரியகிருபைக்காக உமக்கு அனந்த ஸ்தோத்திரம். இக்குழந்தையை முடிவுபரியந்தம் உமது கிருபையில்தற்காத்தருளும். அதன் சரீர வளர்த்தியோடு ஞானவளர்த்தியும் கூடிவரப்பண்ணும். இது உம்மை அறிகிறஅறிவிலும், மெய் விசுவாசத்திலும் வளர்ந்து தேறும்படி இதை உமது ஐக்கியத்தில் வைத்துப் பாதுகாரும்.இது திருச்சபையின் ஜீவனுள்ள அவயமும், தேசத்தின் உத்தமுமான குடியுமாய் வளரும்படி உமதுபரிசுத்தஆவியால் இதை நடத்தியருளும். இதன் பெற்றோரையும், இதைச் சேர்ந்த யாவரையும் தேவரீர்ஆசீர்வதித்து, அவர்களை ஆத்தும சரீர நன்மைகளால் நிரப்பியருளும். இயேசுவின் புண்ணியங்களைமுன்னிட்டு இந்த ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும், சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ88. ஞானஸ்நான உடன்படிக்கைப்புதுப்பிப்புஇன்று நான் என் பரிசுத்த ஞானஸ்நான உடன்படிக்கையைப் புதுப்பித்து, பிசாசையும் அதன்எல்லாக் கிரியைகளையும், அதன் எல்லா வழிகளையும், இந்தப் பொல்லாத பாவலோகத்தையும், என் சுயபாவ மாமிசம் இரத்தத்தையும் அருவருத்து விட்டுவிடுகிறேன். பிதா, குமாரன், பரிசுத்தஆவியே உமதுகைகளில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் ஒப்புவிக்கிறேன். என் ஆத்தும, சரீர, நித்திய ஷேமத்தையும்,எனக்கருமையானவர்களின் ஷேமத்தையும் உமது பாதுகாப்புக்கு ஒப்படைக்கிறேன். என் பரம தகப்பனே,நான் என்னை உமது விசாரிப்பு, இரக்கம், அன்பு, உண்மைக்கு முற்றிலும் கையளிக்கிறேன். என்

இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்துவே, உமது புண்ணியம் நீதியால் என்னை உடுத்திக் கொள்ளுகிறேன். உமதுஅருமையான இரத்தமும், காயங்களும், ஐக்கியமும் அடியேனின் நம்பிக்கை. பரிசுத்தஆவியே,ஸ்தோத்தரிக்கப்பட்ட தேற்றரவாளனே, நான் உமது இரக்கமுள்ள நடத்துதலுக்கும், உமது பெலன்வெளிச்சம் ஆறுதலுக்கும் என்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறேன். திரியேக பராபரனே, தேவரீர்என்னுடையவர், நான் உம்முடையவன். தேவரீர் என் பிதா, நான் உமது பிள்ளை. தேவரீர் என் மேய்ப்பர்,நான் உமது ஆட்டுக்குட்டி. தேவரீர் என் கர்த்தரு, நான் உமது ஆள். என் பராபரனே, நான் உம்மைப்போந்தபடித் தோத்தரிக்க அறியேன். தேவரீர் நீசப்பாவியாகிய என்னை ஒரு பொருட்டாயெண்ணி, பரிசுத்தஞானஸ்நானத்தால் என்னை மறுபடியும் செனிப்பித்துக் கிறிஸ்து இயேசுவிலுள்ள இரட்சிப்பை எனக்குக்கொடுத்தருளினீரே. இந்த உமது கிருபையில் என்னை மரணபரியந்தம் காப்பாற்றும். என் பராபரனே,தேவரீரின் மீட்பு எல்லாக் காலத்திலும் பேய், பாவம் மரணத்துக்கு எதிராக என் ஆறுதலாயிருக்கப்பண்ணும். ஆ, நான் இதையே எல்லா உலக கனத்துக்கும் கீர்த்திக்கும் மேலாக மதித்து, கிறிஸ்துஇயேசுவுக்குள் நான் பாக்கியமாய் மரிக்குமளவும் நான் பெற்ற இரட்சிப்புக்கேற்றவண்ணம் பரிசுத்தமும்தேவபக்தியுமாய் சீவனம் பண்ணச் சுறுசுறுப்பாய் முயலுவேன். ஆ, பிதாவே உமது பரிசுத்த ஆவியின்பலத்தால், உமது நேசகுமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் நிமித்தம் என் ஜெபத்தை இரக்கமாய்க்கட்டளையிட்டருளும். இவையெல்லாவற்றிற்காகவும் திரியேக பராபரனாகிய உமக்கே கனம், துதி,தோத்திரம் என்றென்றைக்கும் உண்டாகக் கடவது, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ89. இக்கட்டு நேர ஜெபம்சர்வத்திற்கும் வல்ல பராபரனே, நெருக்கப்படுகிற நாழியிலே, நம்மை நோக்கிக் கூப்பிடு,அப்பொழுது உம்மை விடுவிப்போம், அதற்காக நீ நம்மை மகிமைப்படுத்தக்கடவாய் என்று தேவரீர்கிருபையாய்த் திருவுளம் பற்றினீரே. இதோ, அடியேன் நெருக்கத்தில் இருக்கிறேன். என் கூப்பிடுதலுக்குச்செவிகொடும். தேவரீர் எனக்கு அனுசாரியாயிருந்தால் எனக்கு விரோதமாயிருப்பவனார்? கர்த்தாவே,எனக்கிரங்கும். என் பாவங்களுக்குத் தக்கபடி செய்யாமல், உமது கிருபையின்படி என்னைக் கண்ணோக்கிப்பார்த்து, என்னை என் இடுக்கண்களுக்கு நீங்கலாக்கி விடுவியும். அக்கினிச் சூளையில் நின்று கூப்பிட்டஅந்த நீதிமான்களுக்கு மாத்திரமல்ல, காவற்கிடங்கி−ருந்து கூப்பிட்ட காதகனாகிய மனாசேக்கும்இரங்கினவரே, பாவியாகிய எனக்கும் சகாயம் செய்யத் தீவிரியும். எல்லாக் காலத்திலும் என் விசுவாசம்தள்ளம்பாறாமல் என்னைக் காத்திரட்சித்தருளும். பாவிகளை இரட்சிக்க இவ்வுலகத்தில் வந்த உமதுதிருக்குமாரனாகிய இயேசுவின் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ77. துக்கம்இயேசையரே, தேவரீர் துக்கத்தில் ஆறுதலாயிருக்கிறீர் என்று அறிந்து, இந்த நேரத்தில் உம்மண்டைஓடிவருகிறோம். மரணத்தினால் இங்கே நேரிட்டிருக்கும் துக்கத்தில் எங்களையும், விசேஷமாய் இந்தவீட்டாரையும் கண்ணோக்கிப் பார்த்து, அழாதோயுங்கள் என்று சொல்−, உமது நல்லாறுதலால்நிரப்பியருளும். நாங்கள் நம்பிக்கையற்ற அஞ்ஞானிகளைப் போல் துக்கப்படாமல், கர்த்தருக்குள் சாகிறமரித்தோர் பாக்கியவான்கள் என்பதை நாங்கள் நம்பி ஆறுதலடையப்பண்ணும். கண்ணீர்விடுகிறவர்களுக்கு உமது பரிசுத்தஆவியை அருளி, அவர்களை மகிழ்ச்சியினால் நிரப்பியருளும். எங்கள்மரணநேரம் எப்பொழுது என்று நாங்கள் அறியாமையால், நாங்கள் அதற்கு ஆயத்தமுள்ளவர்களாய்எந்நேரமும் விழித்திருக்கப்பண்ணும். நாங்கள் இவ்வுலகில் இருக்குமளவும் எங்கள் இரட்சகரைப் பற்றும்மெய்விசுவாசத்தில் பிழைக்கவும், தேவரீர் எங்களை அழைக்கும்போது நித்திய சீவநம்பிக்கையோடுபாக்கியமாய் மரிக்கவும் எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும், சுவாமி, ஆமேன்ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ78. பிரயாணம்கர்த்தாவே, நான் உமது திருநாமத்தை முன்னிட்டு என் வீட்டி−ருந்து புறப்படுகிறேன். என்பயணத்தில் தேவரீர் என்னோடுகூட வாரும். பக−ல் மேகத்தூணிலும், இரவில் அக்கினித் தூணிலுமிருந்துநீர் உமது சனத்தைக் காத்து நடத்தினதுபோல் என்னையும் நடத்தியருளும். என் பிரயாணத்தை நீர்வாய்க்கப்பண்ணி, நான் சந்தோஷத்தோடு என் வீட்டுக்குத் திரும்பிவரக் கிருபை செய்யும். தேவரீர் என்வீட்டாரோடும் இருந்து அவர்களைப் பாதுகாத்து, நான் அவர்களை சீவனோடும் சுகத்தோடும் கண்டுசந்திக்கப்பண்ணும். நான் இப்பூமியில் தங்குமளவும் அரதேசியும் பரதேசியுமாயிருக்கிறேன் என்பதைநினைத்து, மோட்சமாகிய என் சுதேசத்துக்குப் போய்ச் சேர்வதற்கான பாதையிலே நடக்கும்படி உமதுபரிசுத்தஆவியால் என்னை நடத்தியருளும் சுவாமி, ஆமேன்.

ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ79. வேதவாசிப்புக்கு முன்கர்த்தாவே, உம்முடைய வேதத்தில் உள்ள அதிசயங்களை நான் பார்க்கிறதற்காக என் கண்களைத்திறந்தருளும் சுவாமி, ஆமேன்.80. வேதவாசிப்புக்குப் பின்நான் இப்பொழுது வாசித்த உமது வசனம் என்னிருதயத்தில் நன்றாய்த் தரித்து வேரூன்றி நித்தியசீவனுக்கென்று திரளான கனிகளைக் கொடுக்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: