நூலின் ஆசிரியரைப் பற்றிய குறிப்பு
இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்
ஜெ.சி.ரைல் (1816-1900), Translation into Tamil by VS
நூலின் ஆசிரியரைப் பற்றிய குறிப்பு:
இந்த ஆக்கத்தை எழுதியவர் ஜான் சார்லஸ் ரைல் (John Charles Ryle). 1816-1900 ஆண்டுகளில் வாழ்ந்தவர். சுவிசேஷ ஊழியராக தனது பணியை ஆரம்பித்தார்.
இங்கிலாந்திலுள்ள சபைகளில் சுமார் 40ஆண்டு காலம் ஊழியம் செய்தார். 1880ல் லிவர்பூல் என்கிற இடத்தில் பிஷப் ஆக நியமனம் பெற்று அகில உலகத்திலும் நல்ல போதகராகவும், வேதவல்லுநராகவும், நூலாசிரியராகவும் புகழ் பெற்றார். அவருடைய எழுத்துக்கள், ஆவிக்குரிய விஷயங்களை தெளிவாகவும், நடைமுறைக்கு உகந்த விதத்திலும், எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையிலும் எழுதப்பட்டிருப்பதால் இன்றும் அவை பிரபலமாக இருக்கின்றன. சாதாரண மக்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அவர் இவ்விதமான உத்தியைக் கையாண்டிருக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கையை வைராக்கியத்தோடு வாழ வைக்க வேண்டுமென்பதே அவருடைய ஊழியத்தின் முக்கியமான குறிக்கோளாகும். 1800களில் அவருடைய எழுத்துக்கள் பல இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அவைகளை இப்போது மீண்டும் மறுபதிப்பு செய்து வருகிறார்கள். இவருக்கு அடுத்தபடியாக லிவர்பூலில் பதவி வகித்த பிஷப் இவரைக் குறித்து புகழ்ந்து கூறிய வார்த்தைகள்:” இவருடைய எழுத்துக்களை நாம் படிக்கையில் அது நமக்குள் புத்துணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. ரைல் கடவுளுக்கு அருகாமையிலே வாழ்ந்தார், கடவுள் அவரில் வாழ்ந்தார்”.